
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு 2022 வரும் ஏப்ரல் 29 அம் தேதி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார்.
சனி பெயர்ச்சி 2022:
சனியின் இந்த மாற்றம். சுப மற்றும் அசுப பலன்களைத் தருகிறது. குறிப்பாக, இந்த சனிபெயர்ச்சியால் மிதுனம், துலாம் மற்றும் தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சனி ராசி மாறியவுடன் இவர்களின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தும்.
இதனால் சில ராசிக்காரர்களுக்கு சனி தசை, ஏழரை நாட்டு சனி முடிந்து, சில ராசிக்காரர்களுக்கு ஆரம்பமாகும். சனிபகவான் சிறப்பு அருள் ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் பார்வையில் இருந்து விடுதலை கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். நாள்பட்ட நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். போட்டி தேர்வுகளில் இருந்து வெற்றி கிடைக்கும்.
மிதுனம்:
சனிப்பெயர்ச்சி மிதுனம் ராசியினருக்கு நல்ல பலன்களை தரும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளின் வியாபாரம் அதிகரிக்கும். லாபம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். தொலைதூர பயணம் செல்ல முடியும். தீவிர நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். மனதில் இருந்த அழுத்தங்கள் நீங்கி புது உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இந்த சனி பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் பெயர்ச்சியாகவே அமைய இருக்கிறது. புதிய வேலை கிடைக்கலாம். நீண்ட பயணம் செல்ல முடியும். தீவிர நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.