
புதன் பெயர்ச்சி, ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் கல்வி, வேலை மற்றும் வியாபாரம் போன்றவற்றில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
புதன் பெயர்ச்சி 2022:
புதன் சுக்கிரன் ஆளும் ரிஷப ராசிக்கு 2022 ஏப்ரல் 25 ஆம் தேதி இடம் மாறுகிறார். இதனால் இப்பெயர்ச்சி காலத்தில் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் கல்வி, வேலை மற்றும் வியாபாரம் போன்றவற்றில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும் யார் யாருக்கு என்னென்னெ பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்:
ஜோதிட சாஸ்திரப்படி ரிஷபம் சுக்கிரனால் ஆளப்படுகிறது. சுக்ர கிரகம் செல்வத்தின் காரணியாக கருதப்படுகிறது. இந்த ராசியை சேர்ந்தவர்கள், பணம் சம்பாதிப்பதற்காக மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் விரைவில் செல்வந்தர்களாக மாற இதுவே காரணம்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு பொருள் வசதிகள் மீது பற்று அதிகமாக இருக்கும். புதிய கார், ஆடம்பரமான வீடு மற்றும் அபரிமிதமான செல்வம் அவர்களை மிகவும் ஈர்க்கும் விஷயங்களாக உள்ளன. இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறார்கள். பெரும்பாலும், இந்த ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பால் மிக விரைவில் பணக்காரர்களாக மாறுவார்கள்.
கடகம்:
பண விஷயத்தில் கடக ராசிக்காரர்கள் மற்றவர்களை விட முந்திச் செல்கிறார்கள். கடக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவார்கள். மேலும், அனைத்து வேலைகளிலும் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். இதனால் அவர்கள் மிக விரைவில் பணக்காரர்களாகிறார்கள்.
சிம்மம்:
ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ராசிக்காரர்கள் மிகுந்த அதிஷ்டம் பெறுவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதே சமயம் தங்கள் ஆசையை நிறைவேற்ற இரவு பகலாக உழைக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பால் அதிக பணம் சம்பாதிப்பார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.