
ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். குறிப்பாக, சூரியன் 12 கிரகங்களுக்கும் மன்னன் என்று அழைக்கப்படுகிறார். சூரியன் ராசி மாறும்போது அது அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.
ஏப்ரல் 14ஆம் தேதி மீன ராசியில் இருந்து, சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். சூரியனின் இந்த ராசி மாற்றத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், இந்த 3 ராசிகளுக்கு மட்டுமே மிகவும் சிறப்பானதாக அமையும். அவை யார் யாருக்கு என்பதை தெரிந்து கொள்வோம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு, சூரியனின் பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைவதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்.வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். போட்டி தேர்வுகளில் நல்ல முடிவு கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு, இந்த சூரியனின் பெயர்ச்சி நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனக்கசப்புகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசு ராசிக்கார்களுக்கு, சூரியனின் பெயர்ச்சி நல்லதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கக்கூடிய இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வாகன ரீதியான பராமரிப்பு தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீங்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.