
ஏப்ரல் 14ம் தேதி அதாவது, இன்று தமிழ் சுபகிருது புத்தாண்டு பிறந்திருப்பதால், எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளாலாம்.
தமிழ் புத்தாண்டை ஒட்டி நிகழ்ந்த குரு பெயர்ச்சி:
குரு பகவான் ஏப்ரல் 13 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறியுள்ளார். அதேபோன்று, ஏப்ரல் 14ம் தேதி இன்று தமிழ் சுபகிருது புத்தாண்டு பிறந்திருக்கிறது. இந்த தமிழ்ப் புத்தாண்டு யாருக்கு எப்படி பட்ட பலன்களை அள்ளி தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சியை ஒட்டி நிகழ்ந்துள்ள, தமிழ் புத்தாண்டு அதிர்ஸ்ட மழை பொழிய இருக்கிறது. வீடு, வாகனம் வாங்க வங்கி கடன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். வேலை வாய்ப்புகள் தேடி வரும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு அற்புத நாளாக அமைய இருக்கிறது. மற்றவர்களுடைய பாராட்டுகளைப் பெறும் பாக்கியம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு இருக்கும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு, குரு பெயர்ச்சியை ஒட்டி நிகழ்ந்துள்ள தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு திருப்தி கரமாக இருக்கும். மூத்த சகோதரர் வகையில் நிலவிய கருத்து வேறுபாடு நீங்கும். இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால், வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி வாகை சூட கூடிய அற்புத வாய்ப்புகள் அமையும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு, குரு பெயர்ச்சியை ஒட்டி நிகழ்ந்துள்ள தமிழ் புத்தாண்டு பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சில விஷயங்களில் அதிக கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. வழக்கு விவகாரங்களில் சுமுகமான முடிவு பிறக்கும்.வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சியை ஒட்டி நிகழ்ந்துள்ள தமிழ் புத்தாண்டு, நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சியை ஒட்டி நிகழ்ந்துள்ள தமிழ் புத்தாண்டு வெற்றிகரமாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சியை ஒட்டி நிகழ்ந்துள்ள தமிழ் புத்தாண்டு உங்களுடைய மதிப்பு, மரியாதை கூடிய நல்ல நாளாக இருக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பன்மடங்கு அதிகரிக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சியை ஒட்டி நிகழ்ந்துள்ள தமிழ் புத்தாண்டு, உங்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பண வரவு அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகளை பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சியை ஒட்டி நிகழ்ந்துள்ள தமிழ் புத்தாண்டு நல்ல நாளாக அமையும். திடீர் திருப்பம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பண வரவு உண்டாகும் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வாகன ரீதியான பராமரிப்பு தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சியை ஒட்டி நிகழ்ந்துள்ள தமிழ் புத்தாண்டு, மகிழ்ச்சியை தரும். விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைய வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூல பலன் உண்டு. அடுத்தவர் விவாகரத்தில் தலையிட வேண்டாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சியை ஒட்டி நிகழ்ந்துள்ள தமிழ் புத்தாண்டு, தடைகளை தவிர்த்து முன்னேற்றம் தரும். வீட்டை தேவைக்கேற்ப மாற்றி அமைப்பீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மன கசப்புகள் தீரும். புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சியை ஒட்டி நிகழ்ந்துள்ள புத்தாண்டு நாள் மகிழ்ச்சியாக இருக்கும். ஆளுமை திறன் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் முன்னேற்றம் இருக்கும். ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.