Love Horoscope : ஒவ்வொரு ராசிகளும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கும். சிலருக்கு அனைவரையும், தன் பின்னால் சுற்றி வர செய்யும், காந்தம் போல் ஈர்க்கும் திறன் கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு ராசிகளும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கும். சிலருக்கு அனைவரையும், தன் பின்னால் சுற்றி வர செய்யும், காந்தம் போல் ஈர்க்கும் திறன் கொண்டிருப்பார்கள்.
அதிலும், குறிப்பிட்ட சில ராசி கொண்ட பெண்கள் மற்றவர்களை வசீகரிப்பதில், கில்லாடியாக இருப்பவர்கள், பிறரிடம் நடந்து கொள்ளும் விதம், இயல்பு, பேசும் விதம், வாழ்கை முறை போன்றவை முக்கிய காரணமாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மற்றவர்களை வசீகரிப்பதில் கீழே சொன்ன 5 ராசி பெண்கள் மிகவும் கில்லாடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பின்னாடி ஏகப்பட்ட ரசிகர்கள், சுற்றி வருவார்களாம். அவ்வாறு மற்றவர்களை வசீகரிக்கும் குணம் கொண்டவர்கள் துணிச்சலுடன் நடை போட்டு உயர்ந்த நிலையை அடைவார்கள். எந்தெந்த ராசி பெண்கள் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
ஜோதிடத்தின் படி, மேஷ ராசிக்காரர்கள் மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை அதிகம் இருக்குமாம்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் இவர்கள் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக பார்த்து கொள்வார்களாம். அவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கிறார்கள். மொத்தத்தில், அவர்களுடன் வாழ்கை நடத்துபவர்கள் மிகவும் குடுத்து வைத்தவர்கள் ஆவார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் நேர்மறையான குணம் கொண்டவர்கள். மற்றவர்களிடம், மிகுந்த மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாக பழகுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எங்கு சென்றாலும் இவர்களை நோக்கி எப்போதும் கூட்டம் அலைமோதும். இவரது பேச்சு, நடை போன்றவை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மிகுந்த புத்திசாலி குணம் கொண்டவர்கள் மற்றவர்களை தன் மீது பைத்தியமாக வைத்திருப்பார்களாம்.
துலாம்:
அதிக அளவு வசீகரிக்கும் திறன் பெற்ற இந்த ராசி பெண்கள். கடின உழைப்பால் எளிதில் பணத்தை சம்பாதித்து விடுவார்கள்.வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தும் பெண்களாக இருப்பார்கள். தொழிலில் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வார்கள். இந்த ராசி கொண்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
தனுசு :
மிகவும் இயல்பான குணம் கொண்ட தனுசு ராசி நபர்கள் எப்போதும், பிறரிடம் மகிழ்ச்சியாக பழகும் இயல்புடையவர்கள். இந்த மக்கள் பேசும் கலையில் அதிக திறமையானவர்கள், இவர்களது வித்தையால், எளிதில் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கிறார்கள். இவர்கள் எங்கு சென்றாலும், முக்கியத்துடம் பெறுவார்கள். மற்றவர்களிடம் பார்வையில் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள்.
மகரம்:
உங்களது வாழ்வில் உறுதுணையாக இருக்கும் குணம் கொண்ட இந்த ராசி பெண்கள், உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக பார்த்து கொள்வார்கள். இதுமட்டுமல்லாமல் பணம் சம்பாதிப்பதிலும் மற்றவர்களை விட சாமார்த்தியஷாலிகள். மற்றவர்களை தன்னுடைய வசீகரத்தால் எளிதில் கையாளும் திறன் படைத்தவர்கள்.