Weight loss: முட்டை பிரியர்களா நீங்கள்..? அப்படினா...உங்கள் உடல் எடையை ஈஸியாக குறைக்கலாம்..!

Anija Kannan   | Asianet News
Published : Mar 31, 2022, 07:46 AM IST
Weight loss: முட்டை பிரியர்களா நீங்கள்..?  அப்படினா...உங்கள் உடல் எடையை ஈஸியாக குறைக்கலாம்..!

சுருக்கம்

Weight loss: ஆரோக்கியமான வாழ்விற்குப் பல வழிகளில் உதவியாக இருக்கும் முட்டையுடன் வேறு சில ஆரோக்கியமான பொருளைச் சேர்க்கும் போது, உடல் எடை குறைவதில் இருமடங்கு பலன்களைத் வழங்கக்கூடியது.  

உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சி செய்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவது போன்றவை நாம் அனைவரும் பின்பற்றும் வழிமுறையாகும். இவற்றைத் தவிர்த்து உடல் எடையினை சுலபமாகக் குறைக்க ஆரோக்கியமான வழிமுறைகள் உள்ளன. ஆம், நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் முட்டையை பயன்படுத்து உடல் எடையைக் குறைக்கலாம். ஆரோக்கியமான வாழ்விற்குப் பல வழிகளில் உதவியாக இருக்கும் முட்டையுடன் வேறு சில ஆரோக்கியமான பொருளைச் சேர்க்கும் போது, உடல் எடை குறைவதில் இருமடங்கு பலன்களைத் வழங்கக்கூடியது.  

முட்டையில் இருக்கும் நன்மைகள்:

முட்டையில் புரோட்டின், வைட்டமின் A, B 6, B 12, இரும்பு, ஃபோலேட், அமினோ ஆசிட்ஸ், பாஸ்பரஸ் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை முட்டை எளிதில் ஈடுசெய்யும். முட்டைகளில் காணப்படும், ஊட்டச்சத்துக்கள் உடலை வலிமையாக, சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

ஒரு முட்டையில் 75 கலோரிகள் உள்ளன. இதில் 7 கிராம் உயர்தர புரதம் உள்ளது. கூடுதலாக, ஒரு முட்டை சாப்பிடுவதால் 5 கிராம் கொழுப்பு, 1.6 கிராம் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் உடலுக்கு கிடைக்கும். எனவே தான், உடல் எடை குறைப்புக்கான சிறந்த டையட்டில் முட்டை முதல் இடத்தில் உள்ளது.
 
முட்டை மற்றும் கீரை:

வேகமான எடை குறைப்பிற்கு காலை உணவாக முட்டையைச் சாப்பிடுவது உலகம் முழுவதும் தற்போது பரவலாக இருக்கும் உணவு முறையாகும். முட்டையில் இருக்கும் வைட்டமின் D மற்றும் கால்சியம் சத்துகள் உடலின் கொழுப்பைக் கரைப்பது மட்டுமின்றி நம்மை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது.

முட்டையுடன் கீரை சாப்பிடுவது விரைவான எடை இழப்புக்கு ஒரு சிறந்த உணவு முறை.  ஒரு கப் கீரையில் ஏழு கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும்,  கீரைகளைச் சாப்பிடுவது நீண்ட நேரம் பசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. தசை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் வலிமையை அதிகரிக்கிறது.

தேங்காய் எண்ணெய் ஆம்லெட்:

வெண்ணெய் அல்லது மற்ற வகை எண்ணெயில் செய்யப்பட்ட ஆம்லெட்களை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு அதிக கலோரிகளை வழங்குகிறது. தேங்காய் எண்ணெய் வளர்சிதை மாற்றத்தை 5% அதிகரித்து எடையை குறைக்க உதவுகிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், அடுத்த முறை எண்ணெய் அல்லது வெண்ணெய்க்குப் பதிலாக தேங்காய் எண்ணெயில் ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள்.

முட்டை மற்றும் ஓட்ஸ்

முட்டையுடன் ஓட்ஸ் கலந்து சாப்பிட்டால் தொப்பையை குறைந்து, உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.  ஓட்ஸில் உள்ள மாவுச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. முட்டையுடன் ஓட்ஸ் சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க....Summer drinks: கோடையில் உடல் சூடு தணிக்கும் முலாம்பழம்...! பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது..!


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Heart Disease : உங்களுக்கு 40 வயசா? அப்ப இந்த '3' பழக்கங்களை உடனே நிறுத்துங்க.. இதய பிரச்சனைல கொண்டு விடும்
Vitamin B12 Deficiency Habits : இந்த 'காலை' பழக்கங்களை உடனே விடுங்க! உடலில் வைட்டமின் பி12 அளவை குறைக்கும்..!