Summer drinks: கோடையில் உடல் சூடு தணிக்கும் முலாம்பழம்...! பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது..!

Anija Kannan   | Asianet News
Published : Mar 31, 2022, 06:51 AM IST
Summer drinks: கோடையில் உடல் சூடு தணிக்கும் முலாம்பழம்...!  பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது..!

சுருக்கம்

Summer drinks: முலாம்பழம் வெயில் காலத்தில், உடல் சூட்டினை தணித்து, வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தி, சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை போக்கி உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

முலாம்பழம் வெயில் காலத்தில், உடல் சூட்டினை தணித்து, வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தி, சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை போக்கி உடலுக்கு பல்வேறு மருத்துவ நன்மைகளை வழங்குகிறது.

வெயில் காலம் துவங்கிவிட்டாலே, அதிக உஷ்ணம் நம்மை வாட்டி வதைக்கும். இந்த நேரத்தில் வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்சனை, உதட்டில் வெடிப்பு, புண்கள் நாக்கு வறட்சி உள்ளிட்ட பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த சமயம் அடிக்கடி பசி இன்மையும், அதிக தண்ணீர் தாகம் ஏற்படுவதையும், நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

இந்த நேரத்தில், குளிர்ச்சியான பானங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். இளநீர், மோர், கரும்பு ஜூஸ்  வாட்டர் மெலன் அல்லது தர்பூசணி பழம் போன்றவை குளிர்ச்சியை ஏற்படுத்தும். இவற்றை தவிர்த்து, முலாம்பழம் உடல் சூட்டை தணிப்பதற்கு நல்ல பானமாக கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கவல்லதும், வயிற்றுப்போக்கை குணப்படுத்த கூடியது. இதில் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. இது நோய்களை தடுக்க கூடியது மட்டுமின்றி உடலுக்கு புத்துணர்வை அளிக்கவல்லது. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும். கோடைக் காலத்தில் முலாம் பழம் அதிகளவில் கிடைக்கும். கோடைகாலத்துக்கு ஏற்ற உணவாக  முலாம் பழம் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது. 

இதன் நன்மைகள் என்ன? 

முலாம் பழத்தை உண்டு வர மூல நோய் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். சிறுநீர்தாரை எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கும்.அஜீரணத்தை அகற்றி பசி ருசியை ஏற்படுத்தும்.கல்லீரல் பாதிப்புகளை போக்கும்.

பித்தத்தை மொத்தமாக அகற்றும். சரும நோய்க்கு எளிய இயற்கை மருந்து. இப்பழச் சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு. உடலுக்கு தேவையான வலுவைத் தரும். கோடை கால நோய்களில் இருந்து நம்மை நோய்கள் பாதுகாக்கும்.

முலாம் பழம் பானம் தயாரிக்கும் முறை:

முலாம் பழத்தினை இரண்டாக வெட்டி கொண்டு, அதன் சதை பகுதியை தனியாக எடுத்து  பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடிக்கலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பானமாகும். 

முலாம் பழம் மில்க் ஷேக்:

முலாம் பழத்தை பயன்படுத்தி மில்க் ஷேக் தயாரிக்கலாம். விதைகள் நீக்கிய முலாம் பழத்துடன், சிறிது பனங்கற்கண்டு, காய்ச்சிய பால் சேர்த்து அரைத்து சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும். இந்த மில்க் ஷேக்கை காலை உணவின்போது எடுக்கலாம்.

மேலும் படிக்க....Today astrology: சனியின் வீட்டில் நுழையும் செவ்வாய் பகவான்... பாடாய் படப்போகும் 7 ராசிகள்..! இன்றைய ராசி பலன்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்