
இன்றைய காலகட்டத்தில் பள்ளி செல்லும் சிறுவன் முதல் பல்லு விழுந்த பெரியவர்கள் வரை எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாக தொப்பை உருவெடுத்திருக்கிறது. அதிக எடையை கொண்டிருப்பவர்கள் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைத்தாலும் வயிறு தொப்பை மட்டும் குறையவில்லையே என்னும் வருத்தம் இருக்கும்.
இதற்கு முக்கிய காரணம், நம்முடைய உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவை இருக்கிறது. தொப்பை என்றால் அழகு சார்ந்த பிரச்ச்னையாக மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது ஆரோக்கியம் சார்ந்த பல பிரச்சனைகளின் ஆதாரமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சில ஆரோக்கியமான உணவுகள் மூலம் தொப்பையை எளிதில் குறைக்கலாம் அவை என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
எலுமிச்சை மற்றும் தேன்:
தொப்பை மற்றும் உடல் எடையை வேகமாக குறைக்க, தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, அதனுடன் சீரகம், தேன், வெந்தயம் போட்டு வெறும் வயிற்றில் குடிக்கவும்.
ரவை உப்மா:
என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம் ரவை உப்மாவில் உள்ள சிமோலினா என்ற தனிமம் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது நல்ல கொழுப்பை ஊக்குவிக்கிறது. இருப்பினும், உப்மா செய்ய குறைந்த எண்ணெய் பயன்படுத்துவது அவசியம்.
மூங் தால் சிலா:
மூங் டால் சீலாவில் செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து மட்டுமின்றி, நல்ல அளவு புரதமும் உள்ளது. காலை உணவுக்கு இது மிகவும் ஆரோக்கியமான விருப்பமாக கருதப்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து தொப்பையை குறைக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் காலை உணவில் மூங் டால் சீலாவை எடுத்துக் கொள்ளலாம்.
தயிர்:
தொப்பையை குறைக்க விரும்புபவர்கள் இந்த நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த தயிரை காலை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. ஏனெனில், கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த தயிர், எடையைக் குறைக்க உதவுகிறது. இதனுடன், இது உடலில் உள்ள புரதத்தின் அளவையும் நிர்வகிக்கிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.