Today astrology: ஏப்ரல் 3 வரை எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய 5 ராசிகள்...இன்றைய ராசி பலன்..!

By Anu Kan  |  First Published Mar 30, 2022, 5:00 AM IST

Today astrology: கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிகளுக்கு மகிழ்ச்சியை தரும், சில ராசிகளுக்கு விளைவை ஏற்படுத்தும் எனவே, எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 


கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிகளுக்கு மகிழ்ச்சியை தரும், சில ராசிகளுக்கு விளைவை ஏற்படுத்தும் எனவே, எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

ஜோதிடத்தின் படி, கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். அப்படியாக, கிரகங்களின் சஞ்சாரத்தால் ஏப்ரல் 3 வரை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாக அமையப் போவதால், இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

Tap to resize

Latest Videos

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு பொறுமை குறையும். இலக்குகளை அடைய அதிகம் உழைக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால், உங்கள் கடின உழைப்பு சரியான திசையில் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. கல்விப் பணிகளில் இடையூறு ஏற்படலாம்.

கடகம்:

குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்பப் பொறுப்புகள் கூடும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு மனதில் விரக்தி மற்றும் அதிருப்தி உணர்வுகள் இருக்கும்.இவர்களது நம்பிக்கை குறைப்பாடு ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்களின் வாழ்க்கையில் மாற்றமும் சாத்தியம். செலவுகள் அதிகரிக்கும்.

கன்னி:

இந்த நேரத்தில் உங்கள் பணித் துறையில் சில புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள், ஆனால் நீங்கள் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள், ஆனால் நீங்கள் அவர்களை ஆதிக்கம் செலுத்துவீர்கள். இருப்பினும், இந்த காலகட்டத்தில் உங்கள் திறமைளால் வாழ்க்கையின் லட்சியத்தை அடையலாம்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை குறையும், அமைதியைக் கடைப்பிடிக்கவும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். குவிந்த செல்வம் குறையும். ஆடைச் செலவுகள் அதிகரிக்கும். கடின உழைப்பு அதிகம் இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் கடின உழைப்பு மிகுதியாக இருக்கும். வருமானத்தில் இடையூறு ஏற்படலாம். 

மேலும் படிக்க...Horoscope: ஏப்ரல் மாதம் முழுவதும் இந்த 6 ராசிகளுக்கு ''ஜாக்பாட்'' யோகம்...ஏப்ரல் மாத ராசி பலன் 2022..!

click me!