Shani Horoscope: நீதியின் கடவுளான சனி பகவான், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்குள் நுழைகிறார்.
நீதியின் கடவுளான சனி பகவான் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, 2022 ஏப்ரல் 29 முதல் கும்பராசிக்கு இடம் மாறுகிறார். இதையடுத்து, 2022 ஜூலை 11 ஆம் தேதி வரை கும்ப ராசியில் இருக்கும் சனி, அதன் பின் மகரத்திற்கு மாறி ஜனவரி 18, 2023 முதல் மார்ச் 29, 2025 வரை இருப்பார். கும்ப ராசியில் சனி பகவான் இருக்கும் போது, அது அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.
சனி பகவான் பெயர்ச்சி:
சனி பகவான் பணம், குடும்பம், கல்வி, திருமண வாழ்க்கை, அதிர்ஷ்டம் வியாபாரம் மற்றும் லாபம் என அனைத்திலும் பலன்களை அள்ளி தருபவராக இருக்கிறார். இருப்பினும், சனியின் இந்த சஞ்சாரம் சில ராசிகர்களுக்கு அசுபமாக இருக்கும். இதில் யார் யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
சனியின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பண வாய்ப்பு அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷபம்:
சனியின் சஞ்சாரம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு, துணிச்சலுடன் செயல்பட உறுதுணையாக இருக்கும். உங்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். தடை பட்ட திருமணங்கள் விரைவில் நடைபெறும். வாழ்வில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நல்ல நேரமாக இருக்கும். வருமானம் அதிகரித்து காணப்படும். இதுவரை நிறுத்தப்பட்ட வேலைகள் எளிதில் துவங்கும். நீண்ட பயணம் செல்லலாம். சந்தோசம் உண்டாகும். பொருளாதாரம் ஏற்றம் காணும்.
கன்னி:
சனியின் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்கள் பல்வேறு வழிகளில் நன்மை கிடைக்கும். போட்டி தேர்வில் வெற்றி பெறுவீர்கள். பணம் சம்பாதிக்க அதிக வாய்ப்புகள் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.வீட்டுத் தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.