Horoscope: குரு பெயர்ச்சி...இந்த ராசிக்கார்களின் காட்டில் பண மழை தான்...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..!

Anija Kannan   | Asianet News
Published : Apr 06, 2022, 05:30 AM IST
Horoscope: குரு பெயர்ச்சி...இந்த ராசிக்கார்களின் காட்டில் பண மழை தான்...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..!

சுருக்கம்

Horoscope Today: ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் ராசியை வைத்து, ஒரு நபரின் ஆளுமை, இயல்பு, நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் கணிக்க உதவுகின்றன. 

தேவகுரு வியாழன், ஏப்ரல் 13ஆம் தேதி  தனது சொந்த ராசியான மீனத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சஞ்சரிக்கப் போகிறார். இதன் ராசி மாற்றம் சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். குரு பெயர்ச்சி, இன்று எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேஷம்:

மேஷம் ராசிக்காரர்கள் இந்த நாள் நீங்கள் நினைத்ததை விட சிறந்த பலன்களை அடைய இருக்கிறீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கணவன் -மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்களை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் வந்து போகும். எதிலும் நிதானம் தேவை.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபமாக இருக்கும். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.  

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். அதிரடியாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடனை பைசல் செய்வீர்கள். வீண் செலவுகள் வந்து போகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்குமுன்னேற்றம் காணப்படும். புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பீர்கள்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில், கூடுதல் அக்கறையுடன் இருப்பீர்கள். பொருளாதாரம் ஏற்றம் காணும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். உறவினர்களின் வரவு இருக்கும். 

துலாம்:

செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கவனக் குறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே அதிக எச்சரிக்கை  அவசியம். உறவினர்கள் சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள்.

விருச்சகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். சகோதரர் வகையில் சில காரியங்கள் நிறைவேறும். பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிஷ்டம் கிடைக்கும்.

தனுசு:

தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு நன்மைகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேகத்தை விட விவேகம் அவசியம்.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும்.  வெளியூர் பயணத்திற்கு திட்டமிடுவீர்கள்.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. சகோதரர்கள் வழியில் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் பலன் தரும். புது வேலை கிடைக்கும்.

மீனம்:

விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சகோதர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும், பொருட் தேக்கம் ஏற்படாது. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். மொத்தத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

மேலும் படிக்க....Horoscope: சூரியன் பெயர்ச்சி....குபேரனின் அற்புத யோகம்...இன்றைய 12 ராசிகளின் துல்லிய பலன்கள்..!


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?
யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக மாற சாணக்கியரின் வழிகள்