Horoscope: சூரியன் பெயர்ச்சி....குபேரனின் அற்புத யோகம்...இன்றைய 12 ராசிகளின் துல்லிய பலன்கள்..!

Anija Kannan   | Asianet News
Published : Apr 05, 2022, 05:00 AM IST
Horoscope: சூரியன் பெயர்ச்சி....குபேரனின் அற்புத யோகம்...இன்றைய 12 ராசிகளின் துல்லிய பலன்கள்..!

சுருக்கம்

Horoscope Today: சூரியனின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும், சிலருக்கு இது சுபமாக இருக்கும். சிலருக்கு இது அசுபமாக இருக்கும். யாரெல்லாம் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

சூரியனின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும், சிலருக்கு இது சுபமாக இருக்கும். சிலருக்கு இது அசுபமாக இருக்கும். யாரெல்லாம் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சி:

சூரியன் 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி மீன ராசியில் இருந்து, செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த சூரிய பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது. 

வெற்றி, தன்னம்பிக்கை, ஆரோக்கியம், மகிழ்ச்சிக்கு காரணமான சூரியனின் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது. சிலருக்கு இது அசுபமாக இருக்கும்.  சிலருக்கு சுபமாக இருக்கும். சூரியன் பெயர்ச்சி காரணமாக இன்றைய 12 ராசிகளின் பலன்களை தெரிந்து வைத்து கொள்ளலாம்.

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்கள் முக்கிய வேலைகளை நீங்களே செய்து முடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் இதனால் புதிய வாய்ப்புகளும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை. பயணங்களில் இனிமை உண்டு.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் நீங்கள் இந்த நேரம், அதிக உணர்ச்சி வசப்பட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும். எந்த காரியத்திலும், முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்கள் இன்று உங்கள் பழைய நல்ல விஷயங்களை நினைவு கூர்வது நல்லது.தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தொழில் துவங்க ஏற்ற நேரம் இதுவாகும். கணவன் மனைவி அன்பில் அக்கறை தேவை.உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு.

கடகம்: 

உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். இந்த நேரத்தில், சில பொறுப்புகள் வந்து சேரும். 
தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.  

சிம்மம்:

கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். புதிய பொறுப்பு சுமை அதிகரிக்கும். வேலையில், உயர் அதிகாரிகளுடன் இணக்கமான நட்பு ஏற்படும். சிலருக்கு சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். 

கன்னி:

குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைத்து மதிப்பிட வேண்டாம். பல சமயம் பொறுமையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். உத்தியோகஸ்தர்கள் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

துலாம்:

விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உதவு கிடைக்கும்.  உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள்  முடிவுகளில் கவனம் தேவை. 

விருச்சகம்:

திடீர் பண வரவு உண்டாகும். வழக்கில் சாதமாக தீர்ப்பு வரும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் உண்டாகும்.

தனுசு: 

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீண்ட நாள் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பண வரவு இருக்கும். 

மகரம்: 

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு மலர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். 

கும்பம்: 

சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சொத்து பிரச்சனையில் தீர்வு கிடைக்கும். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். 

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாமுயற்சிக்கு, வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை தள்ளி போடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

 மேலும் படிக்க ....Horoscope: ஒரே மாதத்தில் 9 கிரகங்களின் ராசி மாற்றம்...எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்..!


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Fish Eggs Benefits : மீனை விட 'மீன் முட்டை' ரொம்ப நல்லதாம்!! ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடவே கூடாது
Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க