Sukran Peyarchi 2022: குருவின் சொந்த ராசியில் பயணிக்கும் சுக்கிரன்...மகிழ்ச்சி கடலில் நீந்த போகும் 3 ராசிகள்.!

Anija Kannan   | Asianet News
Published : May 01, 2022, 08:00 AM IST
Sukran Peyarchi 2022: குருவின் சொந்த ராசியில் பயணிக்கும் சுக்கிரன்...மகிழ்ச்சி கடலில் நீந்த போகும் 3 ராசிகள்.!

சுருக்கம்

Sukran Peyarchi 2022: செல்வம், புகழ், படிப்பு, முன்னேற்றம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு சென்றுள்ளார். 

செல்வம், புகழ், படிப்பு, முன்னேற்றம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு சென்றுள்ளார். 

கிரகங்கள் ராசி மாறும் போதெல்லாம், சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். இப்பெயர்ச்சியால் மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், கீழே குறிப்பிட்டுள்ள மூன்று ராசிகள் எல்லா வளமும், நலமும் பெற்று சிறப்பாக வாழ போகிறார்கள். அப்படி யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை பதிவின் மூலம் தெறிந்து கொள்ளலாம்.

மகரம்:

நிகழ்ந்துள்ள சுக்கிரனின் பெயர்ச்சியால், உங்கள் திறமை மேம்படும். இன்று நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். உங்கள் திறமைகளை திறம்பட பயன்படுத்துவீர்கள். மாணவர்கள் விரும்பிய இலக்குகளை அடைவார்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். எதிலும், முன்னேற்றம் அவசியம்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சுக்கிரனின் பெயர்ச்சி , புதிதாக தொழில் தொடங்க நினைத்தால் வெற்றி கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றம் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி நிச்சயம். திருமணமாகாதவர்கள் திருமண முயற்சிகளை அணுகலாம். இன்று நீங்கள் எல்லா பிரச்சினைகளையும் புத்திசாலித்தனமாக கையாள்வீர்கள்.  

ரிஷபம்:

ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சுக்கிரனின் பெயர்ச்சியால், புகழ் மேம்படும். பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். சிலர் தங்கள் காதல் உறவைப் பற்றி உணர்ச்சி வசப்படுவார்கள். உங்கள் திருமண உறவு ஏற்படும். எதிலும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் காதல் உறவு கைக்கூடும்.

மேலும் படிக்க....சனி பெயர்ச்சியை ஒட்டி நிகழும் சூரிய கிரகணம்....இரட்டிப்பு பலன்களை பெறும் ராசிகள்! இன்றைய 12 ராசிகளின் பலன்கள்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்