
சனி பகவான் அவர் அவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை தருபவர். சுமார் இரண்டரை வருடங்களுக்கு பிறகு 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி, நேற்று முன்தினம் மதியம் சனி பகவான் மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்கு பிரவேசித்துள்ளார்.
இந்த சனியின் மாற்றம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சுபமாகவும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அசுபமாகவும் இருக்கும் அப்படி யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்:
நிகழ்ந்துள்ள சனியின் மாற்றம், ரிஷபம் ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும். வேலையில் வெற்றி பெற நீண்ட நாட்களாக போராடி வந்தவர்களுக்கு இந்த சனியின் ராசி மாற்றம் நல்ல பலன்களை கொடுக்கும். உங்கள் திறமை பாராட்டப்படும். இந்த நேரத்தில் கடனில் இருந்து விடுபட்டு, புதிய வேலையை துவங்குவீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு நிகழ்ந்துள்ள சனியின் மாற்றம் சனி தசை ஆரம்பிக்கும். சனி தசை செல்வம், ஆரோக்கியம் மற்றும் திருமண வாழ்க்கையை குழைத்து போடும். இந்த நேரத்தில் பணச் செலவு அதிகமாகும். ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.எதிலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகம், குடும்பம் என அனைத்து இடங்களிலும் முன் எச்சரிக்கை அவசியம்.
துலாம்:
துலா ராசியினருக்கு, நிகழ்ந்துள்ள சனியின் மாற்றம் சிறப்பாக கருதப்படுகிறது. உங்கள் ராசிக்கு சனிபகவானின் அசுப பார்வை உள்ளது. இருப்பினும், துலா ராசிக்காரர்கள் இந்த ஆண்டு சனி தசையில் இருந்து விடுதலை பெறுவார்கள். பண விஷயத்தில் சிறப்பு கவனம் தேவை. வாழ்க்கை துணையை கவனமாக பார்த்துக்கொள்ளவும். இந்த நேரத்தில் எதிலும் துணிச்சலுடன் செயல்படுங்கள்.
தனுசு:
கும்பம் ராசியினருக்கு, நிகழ்ந்துள்ள சனியின் மாற்றம் காரணமாக ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவார்கள். உங்களுக்கு பண வரவுக்கு அதிகரித்து காணப்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். இந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு வாழ்வில் மகிழ்ச்சியும், செழுமையும், செல்வமும் பெறுவார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.