Surya Grahan 2022: சூரிய கிரகணம் மேஷத்தின் அஸ்வினி நட்சத்திரத்தில், சித்திரை அமாவாசை தினமான ஏப்ரல் 30ம் தேதி அதாவது நேற்று சனிக்கிழமை மதியம் 12:15 மணிக்கு தொடங்கி, இன்று மே 1 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04:07 வரை நிகழ்ந்துள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், சூரியனை நம்மால் பார்க்க முடியாது. அதை சூரிய கிரகணம் என்கிறோம். இந்த சூரிய கிரகணத்தை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அட்லாண்டிக், அண்டார்டிகா, தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் பார்த்து இருக்கின்றனர்.
எனவே, நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம் காரணமாக எந்ததெந்த ராசிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என்பதை இந்த பதிவின் மூலம் தெறிந்து கொள்ளலாம்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம் காரணமாக, இந்த நேரத்தில் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். பெண்களுக்கு பொறுமை தேவை. திருமண காரியங்கள் நடந்து முடியும். எதிலும், முன்னேற்றம் காணப்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம் காரணமாக, இந்த நாள் நல்ல பலன்களைக் தரும். குடும்பத்தில் அமைதிக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்வீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பெண்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம்:
மிதுனம் ராசியினருக்கு நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம் இந்த நாள் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். மற்றவர்களிடம் பேசும்பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க கூடிய நல்ல நாளாக இருக்கும். சகோதர, சகோதரிகளுக்குள் பாசம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் பலன் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம், இந்த நாள் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சோர்வு ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம், குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனக்கசப்புகள் தீரும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். வெளியூர் பயணங்கள் செல்வீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம், அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்து காணப்படும். உங்களுக்கு திடீர் யோகம் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம், வருமானம் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதுமுக அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அலைச்சல் ஏற்படலாம்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம், இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் ஆதாயம் உண்டு. கணவன் மனைவியிடையே அன்னோன்யம் அதிகரிக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம் காரணமாக, நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் லாபம் ஏற்படும். வாழ்வில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம், உங்களுக்கு பொறுமை அதிகரிக்க வேண்டிய நாளாக இருக்கும். தேவையற்ற வார்த்தைகளை உபயோகிப்பதன் மூலம் சில இழப்புகளை சந்திக்க நேரலாம். கணவன் மனைவிக்குள் புரிதல் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாங்குவதங்கள் தவிர்ப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம், வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன் உண்டாகும். உத்யோகஸ்தர்களுக்கு வாழ்வில் வெற்றி நிச்சயம்.எதிலும், பாராட்டுகள் உண்டு. ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள்.