தாம்பூலத் தட்டில் திருமண அழைப்பிதழ்..! இதுநாள் வரை தெரியாத ரகசியம்..!

By ezhil mozhiFirst Published Dec 24, 2019, 11:55 PM IST
Highlights

ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக் கொடுக்கும் போது தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள். அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள். பணம் கொடுப்பதாக இருந்தால் தட்டில் வைத்து கொடுப்பார்கள். 

தாம்பூலத் தட்டில் திருமண அழைப்பிதழ்..! இதுநாள் வரை தெரியாத ரகசியம்..! 

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத் தட்டில் வைத்து கொடுப்பது ஏன் தெரியுமா? திருமண அழைப்பிதழ்கள் மட்டுமல்ல.... 

ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக் கொடுக்கும் போது தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள். அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள். பணம் கொடுப்பதாக இருந்தால் தட்டில் வைத்து கொடுப்பார்கள். 

இது எதனால் என்றால் கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில் மேல் கீழாய் இருந்தாலும் அந்த பெருமை மனதில் இல்லை என்பதை காட்டுவதற்காகவே....

வெறுமனே கையால் கொடுத்தால் கொடுப்பவர்கள் கை மேலும், வாங்குபவர் கை கீழும் இருக்கும். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதுள் தோன்றக் கூடாது என்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்துக் கொடுப்பது வழக்கமாக கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள். இந்த முறையை தான்  இன்று  வரை நம் முன்னோர்கள்  பயன்படுத்தி வருகின்றனர்.

click me!