கொட்டி கிடக்கும் சந்தோஷத்தை தொலைத்து விட்டு... சாதாரணமாய் பொங்கலை கடந்து செல்லும் நகர வாசிகள்!

By manimegalai aFirst Published Dec 24, 2019, 6:41 PM IST
Highlights

பலருக்கும் 'பொங்கல்' திருநாள், தமிழர்களின் பாரம்பரிய விழா என்பது தெரியும். ஆனால் அதன் சிறப்புகள் குறித்து எந்த அளவிற்கு தெரியும் என்றால்  அது சந்தேகம் தான். இவ்வளவு ஏன்? நகரங்களில் வாழும் பல குழந்தைகளுக்கு, பொங்கல் கிராமப்புறங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது என்பதே தெரிவதில்லை.
 

பலருக்கும் 'பொங்கல்' திருநாள், தமிழர்களின் பாரம்பரிய விழா என்பது தெரியும். ஆனால் அதன் சிறப்புகள் குறித்து எந்த அளவிற்கு தெரியும் என்றால்  அது சந்தேகம் தான். இவ்வளவு ஏன்? நகரங்களில் வாழும் பல குழந்தைகளுக்கு, பொங்கல் கிராமப்புறங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது என்பதே தெரிவதில்லை.

அவர்களை பொறுத்தவரை, பொங்கல் அன்று, கரும்பு வாங்கி தருவார்கள், அம்மா வீட்டில் பொங்கல் செய்து சாமி கும்பிடுவாங்க என்பது மட்டும் தான். இப்படி கொண்டாடுவது நகரத்தில் இருப்பவர்களுக்கு பொங்கல் விழாவாக தெரிந்தாலும், கிராமங்களின் மண் வாசனையோடு கொண்டாடப்படும் விதமே தனி அழகு.

ஆடி மாதத்தில், உழவர்கள் தேடி விதைத்த நெல் பயிரை அறுவடை செய்து, அந்த அறுவடையில் கிடைத்த புது அரிசியை சூரியபகவானுக்கு படைக்க, வாசலில் அடுப்பு வைத்து, புதிய மண் பானையில், இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து ஆகியவை கட்டி மஞ்சள் குங்குமம் வைத்து, முதலில் பால் ஊற்றி கொதிக்க, பின் அரிசியை போட்டு பொங்க விட்டு, குடும்பமே... பொங்கலோ... பொங்கலோ... என ஆரவாரமாக ஒளி எழுப்பி மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள்.

இன்னும் சிலர், சர்க்கரை பொங்கல், வெள்ளை பொங்கலை பெரிய பெரிய பானைகளில் செய்து, அதனை தன்னுடைய அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்கு, குடும்ப உறவினர்கள் வீடுகளுக்கு என கொடுத்து மகிழ்வார்கள். 

சூரிய பாகனானுக்கு நெய் மனம் கமழும் பொங்கலை நெய்வேத்தியம் செய்யும் போது, கருப்பு, கலர் கலர் கோலங்கள் என அந்த நாளே... ஒரு புது தினமாக கடந்து செல்லும்.

பலர் கிராமங்களில் பொங்கல் திருநாளின் பண்பாட்டை நிலைநிறுத்தினாலும், நகரங்களில் வாழ்பவர்களுக்கு..., கருப்பு, கேசில் வைத்த பொங்கல் என சாதாரண நாள் போலவே இந்த நாளும் கடந்து செல்கிறது என்றால் அது மிகையாகாது.

click me!