"ஆப்பிள் டீ" செய்வது எப்படி..? குளிர் காலத்தில் சூப்பர் ஐடியா ..!

By ezhil mozhiFirst Published Dec 24, 2019, 7:29 PM IST
Highlights

ஆப்பிள் டீ சுவையாக இருப்பதோடு அதிக ஆரோக்கியம் நிறைந்தது. முக்கியமாக ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை கட்டுப்படுத்த உதவும். 

"ஆப்பிள் டீ" செய்வது எப்படி..?  குளிர் காலத்தில் சூப்பர் ஐடியா ..!

பொதுவாக ஆப்பிள் பழத்தை கொண்டு, ஜீஸ், சாலட், போன்வற்றை தான் அதிகமாக செய்து உள்கொள்ளுவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர் . ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக அப்படி  சாப்பிடுவதோடு மட்டுமின்றி டீயாகவும் பருகலாம்.

ஆப்பிள் டீ சுவையாக இருப்பதோடு அதிக ஆரோக்கியம் நிறைந்தது.  முக்கியமாக ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை கட்டுப்படுத்த  உதவும். ஆப்பிள் டீயில் எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. 

அதனால் செரிமானம் செயல்பாடுகளை அதிகரிக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அதில் இருக்கும் நார்ச்சத்து உடல் எடை குறைப்புக்கும் வழிவகை செய்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வளர்ச்சிப்பாதையில் மேம்படுத்தவும் செய்கிறது. ஆப்பிளில் கலோரியும் குறைவு. 100 கிராம் ஆப்பிளில் 50 கலோரிகளே உள்ளது. அதனை டீயாக பருகும்போது உடலில் அதிக கலோரி சேராது. 

ஆப்பிள் டீ தயாரிப்பது மிகவும் எளிதான ஒன்று தான்:

செய்முறை:  ஆப்பிள் பழத்தை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் போதுமான அளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் சிறிதளவு லவங்கப்பட்டை கிராம்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்தது இறக்கி வடிகட்டி பருகலாம் குளிர் காலத்தில் ஆப்பிள் டீ பருகுவது இதமாக இருக்கும். ஆப்பிள் டீயுடன் எலுமிச்சை சாரு கலந்தும் பருகலாம்.

இதுநாள் வரை முயற்சி செய்யாதவர்கள், குளிர் காலம் என்பதால் கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கலாம். 

click me!