Healthy Food: 71% இந்தியர்களின் பரிதாப நிலை இதுதான்..? அதிர்ச்சியளிக்கும் புதிய ஆய்வு முடிவு ....

By Anu KanFirst Published Jun 4, 2022, 2:10 PM IST
Highlights

Healthy Food: நாட்டின் 71%  இந்தியர்கள் ஆரோக்கியமான உணவு, உட்கொள்வதில்லை என்று அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

நாட்டின் 71%  இந்தியர்கள் ஆரோக்கியமான உணவு, உட்கொள்வதில்லை என்று அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

சமீபத்திய ஆய்வின் முடிவில், ஒரு சராசரி இந்தியரின் உணவில் போதுமான அளவு பழங்களோ, காய்கறிகளோ, பருப்பு வகைகளோ இருப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், நீரழிவு நோய்கள், வலிப்பு, இதய நோய்கள் அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகள் 5 பயன்கள்...

1. ஒரு நாளில், ஐந்து முறை பழங்கள் மற்றும் காய்கறிகளைக் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது இதய நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன் ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.

2. பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. பல்வேறு நிறங்கள் உடைய பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுப்பதன்  மூலம் அதிகமான ஊட்டச்சத்துகளை பெற முடியும்.  

3. புரதங்கள் நிறைந்த உணவுகளாக இறைச்சிகள், மீன், மற்றும் முட்டைகள் ஆகியவை கூறப்படுகின்றது.  
பீன்ஸ், நட்ஸ், சோளம் மற்றும் சோயா ஆகியவை ஒரு சைவ உணவு உண்பவர்களுக்கு புரத உணவுகளாக உள்ளது. 

4.. மேலும், பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்து கொள்வது இதய நோய், வகை 2 நீரிழிவு, மற்றும் புற்றுநோய் ஆகியவை வராமல் பாதுகாக்க முடியும் என்று ஆராய்ச்சி கூறுகின்றது.

5. கால்சியம் நிறைந்த உணவு ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு ஊக்குவிக்கிறது.  பால் பொருட்கள் கால்சியம் சத்துக்கு ஆதாரமாக உள்ளன. குறைந்த  கொழுப்பு பால், தயிர் மற்றும் சீஸ் பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் படிக்க....Summer Tips: கோடையில் அதிகம் மசாலா சேர்க்கிறீர்களா..? அப்படினா..? இந்த பதிவு உங்களுக்குத்தான்...!

click me!