Menstrual Cycle: மாதவிடாய் ஒழுங்காக வரவில்லையா..? கவலை வேண்டாம்...வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும்...

By Anu KanFirst Published Jun 3, 2022, 12:13 PM IST
Highlights

Menstrual Cycle: மாதவிடாய் சரியாக வரவில்லை. நாட்கள் தள்ளிப்போகிறது என்று பெண்கள் பலர் வருத்தப்படுவதுண்டு ஆனால், இதை நாம் வீட்டில் இருந்தே சரி செய்ய முடியும். அது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளவும். 

மாதவிடாய் சரியாக வரவில்லை. நாட்கள் தள்ளிப்போகிறது என்று பெண்கள் பலர் வருத்தப்படுவதுண்டு ஆனால், இதை நாம் வீட்டில் இருந்தே சரி செய்ய முடியும். அது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளவும். 

மாதவிடாய் சுழற்சிகாலம்: 

ஒரு பொதுவான மாதவிடாய் சுழற்சிகாலம் என்பது 21 முதல் 35 நாட்கள் வரை என கருதப்படுகிறது. அப்படியான, வழக்கமான மாதவிடாயின் சுழற்சியின்போது, ஒரு பெண்ணின் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் சுத்தம் செய்யப்படுவதால் உடல் ஆரோக்கியமாகி புத்துயிர் பெறுகிறது. எனவே, ஒவ்வொரு பெண்ணும் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு முறையான மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம்.

இருப்பினும், இன்றைய பெரும்பாலான இளைய தலைமுறையிடம், ஒழுங்கற்ற மாதவிடாய், வயிற்று வலி, மனநிலை மாற்றங்கள், கருவுறாமை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவை இயல்பாகி உள்ளது.

அந்த வகையில், மாதவிடாய் அல்லது அதன் சுழற்சி காலங்களை சரியான முறையில் தூண்டும் சில  வீட்டு வைத்திய குறிப்புகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

சோற்றுக்கற்றாழை - 50 கிராம் 

அன்னாச்சி பழம் - ஒரு துண்டு 

கிராம்பு - 2 

ஏலக்காய் - 2 

வெற்றிலை -1  

இவை அனைத்தையும் ஒன்றாக இடித்து ஜூஸ் போல், வாரத்திற்கு நான்கு நாட்கள் காலை மற்றும் மாலை சாப்பிட்டு ஒருவேளை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சிக்கலில் நல்ல மாற்றம் பார்க்க முடியும். 

இது தவிர தேநீர் குடிக்கவும்:

வெந்தய விதை, இஞ்சி தேநீர், கெமோமில் தேநீர், மற்றும் பெருஞ்சீரக விதை தேநீர் ஆகியவை உடலின் ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். அவை உங்கள் மாதவிடாய் பிரச்சனையை  சரி செய்வதுடன், வயிற்று வலி, முறையற்ற உணவு மற்றும் மனநிலை பிரச்சனை போன்ற சிக்கல்களையும் தவிர்க்கும். எனவே, இந்தப் பானத்தை ஒரு நாளில் ஒரு தடவையாவது அருந்துவது நல்லது.

மேலும் படிக்க.....Weight gain problem: உடல் பருமனானவர்களுக்கு எச்சரிக்கை...இளம் வயதிலேயே இப்படி ஒரு பிரச்சனை வரும்..?

click me!