Weight gain problem: உடல் பருமனானவர்களுக்கு எச்சரிக்கை...இளம் வயதிலேயே இப்படி ஒரு பிரச்சனை வரும்..?

Anija Kannan   | Asianet News
Published : Jun 03, 2022, 11:32 AM IST
Weight gain problem: உடல் பருமனானவர்களுக்கு எச்சரிக்கை...இளம் வயதிலேயே இப்படி ஒரு பிரச்சனை வரும்..?

சுருக்கம்

Weight gain problem: உடல் பருமன் என்பது உலகெங்கிலும் உள்ள முக்கிய ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும். அதிக உடல் எடை அல்லது பருமனாக இருப்பது நமது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, நமது மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். 

உடல் பருமன் என்பது உலகெங்கிலும் உள்ள முக்கிய ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும். அதிக உடல் எடை அல்லது பருமனாக இருப்பது நமது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, நமது மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். 

இளம் வயதிலேயே தோன்றும் பிரச்சனை..?

20 முதல் 25 வயதில் உடல் எடை கூடினால் பல்வேறு நோய்கள் வரக்கூடும். உடல் எடை அதிகரித்தால், 30 வயதிலேயே சர்க்கரை நோய் வரக்கூடும். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 இல் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களா இருக்கிறார்கள். 
உடல் எடை அதிகம் உள்ள இளம் பெண்களுக்கு சினைப்பை நீர் கட்டி, மாதவிடாய் பிரச்சனை வரும்.  எனவே, வயதை மீறிய எடையை கட்டுப்படுத்துவது அவசியம். 

உடல் எடை அதிகரிப்பு காரணம்..?

இந்த தலைமுறையினருக்கு, உடல் எடையினை குறைப்பது என்பது  மிகுந்த சவாலாக உள்ளது. உடல் எடை குறைய உடற்பயிற்சி செய்தால் போதும் என்று இருந்து விடுவது எந்தப் பலனையும் தராது. எனவே, நமது உணவுப் பழக்கங்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், உடல் எடையைக் குறைப்பது மட்டுமின்றி ஆரோக்கியமாகவும் வாழலாம். ஏனெனில், உடல் எடை குறையாமல் இருக்க நமது உணவுப் பழக்கமும் ஒரு முக்கியக் காரணமாகும். 

அதற்காக, உடல் எடையைக் குறைக்க உணவைத் தவிர்க்கவேண்டும் என்பதல்ல, சில ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றி உடல் எடையினை விரைவாகக் குறைக்கலாம். குறிப்பாக, உடலை ஒல்லியாகக் காட்ட உடற்பயிற்சி செய்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவது போன்றவை அவசியம். 

உடல் எடையை குறைக்கும் உணவுகள்..?

இது தவிர உடல் எடை வேகமாக குறைய முட்டையுடன், இரும்புச்சத்து அதிகமுள்ள கீரையைச் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்த வழிமுறையாகும். பல்வேறு ஆய்வுகளின் படி, கிரீன் டீ என்பது உடல் எடையினை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த பானமாக உள்ளது. 

ஆப்பிள்களில், நார்ச்சத்து, வைட்டமின்கள், ஊட்டச் சத்துக்கள் போன்றவை அதிக அளவில் இருப்பதால், இவை எளிதில் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.

மேலும், வேர்க்கடலையில்,  மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளால் நிரம்பியுள்ளது. இவை உடல் எடையினை குறைக்க உதவுகிறது. மேலும், இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகவும் அமைகின்றது.

 மேலும் படிக்க ....Relationship: அந்த விஷயத்தில் வாழ்கை துணையை சமாளிக்க...இல்லறம் சிறக்க சில சிம்பிள் டிப்ஸ்....

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Bread Omelette for Breakfast : காலை உணவாக பிரட் ஆம்லெட் சாப்பிட்டுறது நல்லதா? தொடர்ந்து சாப்பிடுவறங்க இதை கவனிங்க
Push-Ups : இந்த '1' உடற்பயிற்சியை தினமும் காலைல பண்ணாலே 'உடலில்' பல மாற்றங்கள் வரும்