Horoscope: மேஷ ராசியில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்...யாருக்கு ஆபத்து? யாருக்கு ராஜ யோகம்..!

Published : Apr 12, 2022, 05:00 AM IST
Horoscope: மேஷ ராசியில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்...யாருக்கு ஆபத்து? யாருக்கு ராஜ யோகம்..!

சுருக்கம்

Horoscope: ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது. நடக்கபோகும், சூரிய கிரகணம் யாருக்கு எச்சிரிக்கை, யாருக்கு நன்மை என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, பல முக்கிய கிரகங்களின் மாற்றங்களின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் இந்த மாதத்தில் சுமார் 9 கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. முன்னதாக, செவ்வாய் மகர ராசியில் இருந்து ஏப்ரல் 07 ஆம் தேதி சனி பகவான் ஆளும் கும்ப ராசிக்கு சென்றார். இந்த பெயர்ச்சியால் மேஷம் மற்றும் விருச்சிக ரசிக்காரர்கள் சற்று சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய சூழல் இருந்தது. 

சூரிய கிரகணம்:

இந்நிலையில், இந்த மாதத்தின் கடைசி தேதி அதாவது ஏப்ரல் 30-ம் தேதி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணமும் மேஷ நிகழும். பஞ்சாங்கத்தின்படி, சூரிய கிரகணம் இரவு 12:15 மணிக்கு ஆரம்பித்து,  மே 01 அன்று காலை 4:07 மணிக்கு முடிவடையும். இந்த சூரிய பெயர்ச்சி காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் சாதகமாக அமையப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்: 

சூரிய கிரகணத்தால்,  ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் வந்து சேரும். இதுவரை வாழ்வில் இருந்த தடைகள் நீங்கும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். இதுவரை தடை பட்ட காரியங்கள் வெற்றியடையும். 

கடகம்: 

சூரிய கிரகணத்தால் கடகம் ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.  சூரிய கிரகணத்தின் தாக்கத்தால் வேலையில் முன்னேற்றம் காணப்படும். உங்களின் அந்தஸ்து உயரும். தொழில் வெற்றி பெறும். வெளிநாடு போகும் யோகம் கிடைக்கும். 

துலாம்: 

துலாம் ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம், நல்ல பலனைத் தரும். இதன் தாக்கத்தால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். இது தவிர வியாபாரத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.

மகரம்:

மகரம் ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் சாதகமாக அமையும். தொழிலில் லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகம். அரசுப் பணிகளில் வெற்றி உண்டாகும். இதனுடன், அதிர்ஷ்டத்தின் முழு பலனும் கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்