2024 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் 50 சிறந்த உணவகங்களின் பட்டியலில் 3 இந்திய உணவகங்கள் இடம்பெற்றுள்ளன.
2024 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் 50 சிறந்த உணவகங்களின் பட்டியல் 26 நேற்று சியோலில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் செசான் (டோக்கியோ), ஃப்ளோரிலேஜ் (டோக்கியோ) மற்றும் ககன் ஆனந்த் (பாங்காக்) ஆகியோர் முதலிடம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் 3 இந்திய உணவகங்கள் இடம்பெற்றுள்ளன. மும்பையின் மாஸ்க் (Masque, Mumbai) 23வது இடத்தையும், இந்தியன் ஆக்சென்ட் புதுடெல்லி (Indian Accent New Delhi2) 6வது இடத்தையும், ஆவர்த்தனா, ஐடிசி கிராண்ட் சோழா, சென்னை (Avartana, ITC Grand Chola, Chennai) 44வது இடத்தையும் பிடித்தன. இதன் மூலம் இந்தியாவின் சிறந்த உணவகமாக மாஸ்க் ஹோட்டல்தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இதே மூன்று இந்திய உணவகங்கள் ஆசியாவின் 50 சிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம் பிடித்தன. 2015 முதல் 2021 வரை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சிறந்த உணவகமாக டெல்லியில் உள்ள இந்தியன் ஆக்சென்ட் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, சென்னையின் ஆவர்த்தனா இந்த பட்டியலில் முதன்முறையாக நுழைந்தது.
2024 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் 50 சிறந்த உணவகங்களின் முழுப் பட்டியல் இதோ:
1. செசான், டோக்யோ
2. ஃப்ளாரிலெஜ், டோக்யோ
3. ககன் ஆனந்த், பாங்காக்
4. தி சேர் மேன், ஹாங்காங்
5. விங், ஹாங்காங்
6. நுசாரா, பாங்காக்
7. சுஹ்ரிங், பாங்காக்
8. டென், டோக்யோ
9. லா சிம், ஒசாகா
10. ஒடெட்டே, சிங்கப்பூர்
11. சோர்ன், பாங்காக்
12. லே டு, பாங்காக்
13. மிங்கிள்ஸ், சியோல்
14. நரிசாவா, டோக்கியோ
15. பர்ண்ட் எண்ட்ஸ், சிங்கப்பூர்
16. நெய்பர்ஹுட், ஹாங்காங்
17. பொட்டாங், பாங்காக்
18. 7த் டோர், சியோல்
19. ஃபூ ஹெ ஹுய், ஷாங்காய்
20. யூபோரியா, சிங்கப்பூர்
21. ஓஞ்சியம், சியோல்
22. லாகி, தைபே
23. மாஸ்க், மும்பை
24. டோயோ உணவகம், மணிலா
25. பார்ன், சிங்கப்பூர்
26. இந்திய ஆக்செண்ட், புது தில்லி
27. மோனோ, ஹாங்காங்
28. மெட்டா, சிங்கப்பூர்
29. சம்ருப் சம்ருப் தாய், பாங்காக்
30. லாபிரிந்த், சிங்கப்பூர்
31. செரோஜா, சிங்கப்பூர்
32. கேப்ரிஸ், ஹாங்காங்
33. ஜே.எல் ஸ்டுடியோ, தைச்சங்
34. முமே, தைபே
35. வில்லா ஐடா, வகயாமா
36. லிங் லாங், ஷாங்காய்
37. ஆண்டோ, ஹாங்காங்
38. லெஸ் அமிஸ், சிங்கப்பூர்
39. சசென்கா, டோக்கியோ
40. 102 ஹவுஸ், ஷாங்காய்
41. மோசு, சியோல்
42. பான் டெபா, பாங்காக்
43. லொல்லா, சிங்கப்பூர்
44. ஆவர்த்தனா, சென்னை
45. கோ, ஃபுகுயோகா
46. ஆகஸ்ட், ஜகார்த்தா
47. சென்சி, கியோட்டோ
48. அனன் சைகோன், ஹோ சி மின் நகரம்
49. செஃப் டாம்ஸ் சீசன்ஸ், மக்காவ்
50. மீட் தி பண்ட், ஷாங்காய்
காதலுக்காக ரூ.2500 கோடி சொத்துக்களை உதறித் தள்ளிய கோடீஸ்வர பெண்.. சிலிர்க்க வைக்கும் காதல் கதை..