Kitchen Tips : கொளுத்தும் வெயிலில் சமையலறையில் கூலாக வேலை செய்ய சூப்பரான டிப்ஸ்!!

By Kalai SelviFirst Published Mar 26, 2024, 11:46 AM IST
Highlights

கோடையில் சமையலறையை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள். சமையலறையில் கூலாக வேலை செய்யலாம்.

கோடை காலம் வந்துவிட்டதால், சூரிய ஒளி மற்றும் வெப்ப அலை நம்மை வாட்டி வதைக்கிறது. இதனால், மதிய வேளையில் வெளியில் வேலை செய்ய முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனால், பெரும்பாலான கோடை மதியங்களில் வீட்டுக்குள்ளேயே இருக்க விரும்புகிறார்கள். அதுவும் குறிப்பாக, மே மாத வெயிலில் வீட்டை விட்டு வெளியே செல்வது மட்டுமல்ல, ஏசி, கூலர் இல்லாமல் கூட வீட்டுக்குள் இருப்பது சிரமமாக உணர்கிறார்கள்.

அத்தகைய சூழ்நிலையில், சமையலறையில் தினமும் பல மணி நேரம் செலவிடும் இல்லத்தரிகளுக்கு இந்த நாட்களில் சமைப்பது ஒரு தண்டனைக்குக் குறைவானது அல்ல என்றே சொல்லலாம். அதுவும் குறிப்பாக,  சமையலறை சிறியதாகவும் காற்றோட்டம் குறைவாகவும் இருந்தால் இந்த பிரச்சனை இன்னும் பெரியதாகிவிடும். 

இதையும் படிங்க: Kitchen Hacks : உங்கள் மிக்ஸி நீண்ட நாள் நீடிக்க விரும்பினால் 'இந்த' ஸ்பெஷல் டிப்ஸ் உங்களுக்காக..!

ஆனால் பொதுவாகவே பலரது வீடுகளில் சமையல் அறை சிறியதாகவே இருக்கும். இதனால் கோடை காலத்தில் இங்கு நின்று வேலை செய்வது சிரமமாக இருக்கும். மேலும் இந்த பருவத்தில் சமையல் அறையின் வெப்பநிலை வீட்டின் மற்ற அறைகளை விட அதிகமாகவே இருக்கும். இங்கு வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை உருவாக்கும் பொருட்களுடன் காற்றோட்டத்திற்கு போதிய இடவசதி இல்லாததே இதற்கு காரணம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், சமையலறையில் வெப்பத்தை ஓரளவுக்கு விலக்கி வைக்கலாம். எனவே கோடை காலத்தில் சமையலறை வெப்பமடையாமல் எப்படி காப்பாற்றுவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.. அதுமட்டுமின்றி இதன் உதவியுடன் நீங்கள் வெப்பமான வெப்பத்திலும் சமையலறையில் கூலாக வேலை செய்யலாம்.

இதையும் படிங்க: Kitchen Tips : பெண்களே.. கிச்சனில் வேலையை எளிதாக்க சூப்பரான டிப்ஸ் இதோ..!!

நேரத்தை அமைக்கவும்: பொதுவாக மதிய உணவு தயாரிக்கும் நேரம் மதியம் என்று கருதப்படுகிறது. ஆனால், வெயிலின் தாக்கத்தால் நீங்கள் சிரமப்பட்டால், அதிகாலையில் மதிய உணவை தயாரித்து, அதை சூடுபடுத்தி, மதிய உணவு நேரத்தில் பரிமாறினால் நன்றாக இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் பிற்பகல் வெப்பத்திலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.

காற்றோட்டம் அவசியம்: சமையலறை குளிர்ச்சியாக இருக்க, போதுமான காற்றோட்டம் இருப்பது மிகவும் முக்கியம். இதற்கு, சமையலறை ஜன்னல்களைத் திறந்து வைத்து, எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்தவும். இது தவிர, உங்கள் சமையலறையில் மின்சார புகைபோக்கி பயன்படுத்தலாம். இவை அனைத்தின் உதவியுடன், சமையலறையிலிருந்து வெப்பத்தை அகற்றுவது எளிதாக இருக்கும், மேலும் அறை கூலாகவும் இருக்கும்.

பிரஷர் குக்கர் பயன்படுத்தவும்: பிரஷர் குக்கரில் உணவு விரைவாக சமைக்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்களிடம் வெவ்வேறு வகையான பிரஷர் குக்கர்கள் இருந்தால், நீங்கள் குறைந்த நேரத்தில் பல வகைகளை செய்யலாம். அது மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இது சமையலறையை கூட சூடாக்குவதில்லை.

கேஸ் அடுப்பை குறைத்து கொள்ளவும்: பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் கேஸ் அடுப்பில் தான் உணவு சமைக்கப்படுகிறது. ஆனால் கோடை காலத்தில் அதன் பயன்பாட்டை குறைத்தால் நல்லது. ஏனெனில் இது அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இதனால் சமையலறையில் நிற்பது கடினமாக இருக்கும் அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் கேஸ் அடுப்பின் பயன்பாட்டை குறைத்து கொள்வது நல்லது. மாறாக வேறு ஏதெனும் பயன்படுத்தலாம். உதரணமாக எலக்ட்ரிக் ஸ்டவ்.

குறைந்த மின் சாதனங்களை பயன்படுத்துங்கள்: மின்சாதனங்களை அதிகமாக பயன்படுத்தினால் அதிக வெப்பம் உண்டாகிறது அத்தகைய சூழ்நிலையில் கோடை காலத்தில் சமையலறையை வைத்திருக்க விரும்பினால் மைக்ரோவேவ் போன்ற மின் உபகரணங்களை குறைவாக பயன்படுத்துங்கள்.

ஜன்னல்களுக்கு காட்டன் திரைச்சீலை: சமையல் அறையில் வெப்பம் ஏற்படுவதற்கு ஜன்னல்களும் ஒரு காரணம். ஏனெனில், இது நேரடியாக சூரிய ஒளியை அறைக்குள் கொண்டு வருகிறது. எனவே, உங்கள் சமையலறையில் ஜன்னல்கள் இருந்தால் அதன் மீது காட்டன் துணியால் திரைச்சீலை போடுங்கள். மேலும் சூரிய உதயத்திற்கு முன் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சிறிது நேரம் ஜன்னல்களை திறந்து வைக்கவும். இதனால் அறை குளிர்ச்சியாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!