இந்த கோடை வெயில் இதமாக இருக்க ஆரோக்கியமான நுங்கு ஜூஸ் செய்து குடியுங்கள்..
கோடைகாலம் தொடங்கிவிட்டதால், சூரியனின் கதிர்களுக்கு நாம் அனைவரும் பலியாகி விட்டோம். வெப்பத்தைத் தணிக்கவும், கோடையின் தீய விளைவுகளிலிருந்து நம்மைத் தடுக்கவும், நம் உணவில் குளிரூட்டிகளை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். அத்தகைய ஒரு சிறந்த குளிரூட்டி எதுவென்றால், அது 'நுங்கு' தான். இது பனை மரத்தில் இருந்து வருகிறது. மேலும் இது இந்தியாவின் தென் பகுதிகளில் தான் எளிதாக கிடைக்கும்.
நுங்கை வெட்டும் போது அதிலிருக்கும் ஜெல் பார்ப்பதற்கு லிச்சி பழம் போல இருக்கும். நுங்கை அப்படியே சாப்பிடலாம் அல்லது அதன் மேல் இருக்கும் வெள்ளை தோலை மட்டும் நீக்கிவிட்டு, அதன் ஜெல்லியை மட்டும் சாப்பிடலாம். உங்களுக்கு தெரியுமா.. நுங்கின் தோல் வயிற்று கோளாறுகளை குணப்படுத்த மிகவும் நல்லது. நுங்கு ஆங்கிலத்தில் 'ஐஸ் ஆப்பிள்' என்றும், தமிழில் பனம் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. நுங்கு சிறந்த மருத்துவ குணதைக் கொண்டது.
இதையும் படிங்க: Nungu Benefits : கோடை சீசனில் நுங்கு ஏன் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் தெரியுமா..? அதன் நன்மைகள் இதோ!!
இதில் வைட்டமின் ஏ, பி, சி, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். அதுமட்டுமின்றி, மலச்சிக்கல் மற்றும் சோர்விலிருந்து நிவாரணம் அளிக்க பெரிதும் உதவுகிறது. நுங்கானது ஹீட் ஸ்ட்ரோக், பருக்கள், வெப்பம் போன்றவற்றிலிருந்து தடுக்கிறது. இதில் சில பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. அவை மார்பகத்தின் வீரியம் வளர்ச்சியைத் தடுக்கிறது. சொல்லபோனால் நுங்கு ஒரு சிறந்த ஆற்றல் ஊக்கியாகும். எனவே, இப்போது இந்த கோடைக்கு இதமாக இருக்க நுங்கு ஜீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..
நுங்கு ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:
நுங்கு - 4
தண்ணீர் - 1 கப்
சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை - 2 டீஸ்பூன் (விரும்பினால்)
இதையும் படிங்க: ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க "நுங்கு பாயசம்" சூப்பராக இருக்கும்
செய்முறை:
நுங்கு ஜூஸ் செய்ய முதலில், நுங்கின் தோலை உரித்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். பிறகு உங்களுக்கு தேவையான அளவு மட்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதிகம் சேர்க்க வேண்டாம். மேலும் நீங்கள் விரும்பினால் சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரையைச் சேர்த்து கொள்ளுங்கள். அவ்வளவு தான். இதில் சில ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து குடித்தால் ஜில்லென்று இருக்கும். முக்கியமாக, இதை நீங்கள் ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்க வேண்டும். தேவைப்படும் சமயத்தில் மட்டும் ஃபிரஸ் ஜூஸ் ஆக செய்து குடியுங்கள். நீங்கள் இதில் சிறிது பால் சேர்த்து மில்க் ஷேக்காகவும் செய்யலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D