Parenting Tips : நீங்கள் உங்கள் குழந்தையை அடிக்கிறீர்களா...? அப்ப கண்டிப்பாக இத படிங்க! உங்களுக்காகத்தான்..

Published : Mar 26, 2024, 03:20 PM ISTUpdated : Mar 26, 2024, 03:30 PM IST
Parenting Tips : நீங்கள் உங்கள் குழந்தையை அடிக்கிறீர்களா...? அப்ப கண்டிப்பாக இத படிங்க! உங்களுக்காகத்தான்..

சுருக்கம்

சரியான நடத்தை மற்றும் ஒழுக்கத்தை கற்பிக்க குழந்தைகளை  பெற்றோர்கள் சில சமயங்களில் அதிகமாக தண்டிக்கிறார்கள். ஆனால் அது தவறு..

பொதுவாகவே, குழந்தைகள் ஏதாவது தவறு செய்யும் போது, பெற்றோர்கள் அவர்களைத் திட்டுவது அல்லது அச்சுறுத்துவது வழக்கம். ஆனால், குழந்தைகளின் மனப்பான்மை, நடத்தை ஆகியவை சரியாக இருக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் தெரிந்துகொள்ள இது உதவும். 

மேலும், குழந்தைகள் சொன்ன பேச்சை கேட்காதபோது,   தவறாக நடந்து கொண்டால், அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டுமே தவிர அவர்களை அடிக்க கூடாது. இது குழந்தைகளை பாதிக்கலாம். குழந்தைகளை தண்டிக்கும்போது மிகவும் கவனமாக இருங்கள். சரி இப்போது குழந்தைகளை அடிப்பதற்கு பதிலாக அவர்களை எப்படி தண்டிக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.

அடிப்பதில் வரம்பு:
வெளி நாடுகளில் பெற்றோர்கள் குழந்தைகளை அடிக்க கூடாது. அப்படி செய்வது தவறும்கூட. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிப்பார்கள். ஆனால் அதிலும் ஒரு வரம்பு இருக்க வேண்டும். அதையும் மீறி மீண்டும் மீண்டும் அடிப்பது குழந்தை தனிமையை உணர வைக்கும். அதையும் மீதி செய்தால், அது அவர்களின் கல்வி செயல்திறன், உணர்ச்சி நுண்ணறிவு, மனச்சோர்வு மற்றும் வாழ்க்கை கவலையை மிகவும் மோசமாக பாதிக்கும். ஒரு கட்டத்திற்கு பின் அவர்கள் சலிப்பான ஆளுமையைக் கொண்டிருக்கலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?
உங்களுக்கு கோபம் வரும் சமயத்தில், முதலில், ஆழ்ந்த மூச்சு விடுங்கள். இதற்குப் பிறகு குழந்தையுடன் பேசுங்கள். குழந்தையின் தவறை மிகவும் மென்மையாகவும், சற்று நம்பிக்கையுடன் உரத்த குரலில் சொல்லுங்கள். இது வேலை செய்யவில்லை என்றால், மடிக்கணினி, ஐபாட் மற்றும் விளையாடும் நேரத்தை குழந்தைகளின் கைகளில் இருந்து பிடுங்கிவிடுங்கள்.

இதையும் படிங்க:  Parenting Tips : பெற்றோர்களே.. தோல்வியை எதிர்கொள்ள உங்கள் பிள்ளைக்கு 'இப்படி' சொல்லி கொடுங்க!

கெட்ட வார்த்தை யூஸ் பண்ணாதீங்க:
பெரும்பாலான தாய்மார்கள் கோபத்தில் குழந்தைகளை திட்டிவிடுவார்கள். ஆனால் எந்த அர்த்தமும் இல்லாமல் குழந்தையை திட்டுவதால் பலன் இருக்காது. இப்படி செய்வது குழந்தைகளுக்கு  எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, குழந்தைகளிடம் எக்காரணம் கொண்டும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். நீங்கள் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினால், குழந்தை நல்ல மனிஷ்னாக வளர மாட்டார்கள்.

இதையும் படிங்க: Parenting Tips : Exam முடிஞ்சதும் உங்கள் குழந்தைகளை பிஸியாக வைத்திருக்க சில ஐடியாக்கள் இதோ!

இதற்கு இப்படி செய்யுங்கள்:
பெற்றோர்களே..கத்துவதற்கு பதிலாக குழந்தையுடன் பேசுங்கள். மற்றும் குழந்தையின் மனதைத் ஏதாவது ஒரு வழியில் திசைதிருப்புங்கள். முக்கியமாக, குழந்தையின் 
நடத்தையை மாற்ற தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். இப்படி செய்து வந்தால் குழந்தைகளும் பழகிவிடுவார்கள்.

இருட்டு அறையில் வைப்பது தவறு:
சில பெற்றோர் குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் இருட்டு அறையில் அடைத்து வைப்பார்கள். ஆனால் இது குழந்தையை உணர்ச்சி ரீதியாக பாதிக்கலாம். என்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்று குழந்தைகள் நினைக்கலாம்ஆனால், இப்படி தொடர்ந்து செய்தால், அவர்களை தனிமையாகவும், தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டும். அதுமட்டுமின்றி, சவால்களை ஏற்கத் தயங்குவதும், வாழ்க்கையில் எதிர்மறையான உணர்வும் ஏற்படலாம்.

மிரட்டலாம்:
இது மிகவும் எளிதான தண்டனை முறையாகும். இது குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை புகட்டுவதற்கு சிறந்த வழியாகும். என்ம்வே, அவர்கள் தவறு செய்யும் போது உறவினர்களின் வீட்டிற்கு அனுப்பி விடுவதாக மிரட்டுங்கள்.. நீங்கள் இதை அடிக்கடி செய்வதற்கு  பதிலாக குழந்தையின் சில நடத்தைகள் ஏன் தவறாக இருக்கின்றன என்பதை சரியாக விளக்குங்கள்.

மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம்: 
ஒவ்வொரு பெற்றோரும் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகிறார்கள். மேலும் அப்படி செய்வது உந்துதல் பெற முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால் அதற்கு நேர்மாறானது உண்மை. ஒப்பிடுவதன் மூலம் குழந்தையை பாதிக்கிறது. ஒரு குழந்தை தனது பலவீனங்களை மட்டுமே பார்த்து தன்னம்பிக்கையை இழக்கும். இது குழந்தை பெரிய விஷயங்களைச் சாதிப்பதைத் தடுக்கிறது. குழந்தையை ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, குழந்தையின் பலவீனங்களில் கவனம் செலுத்துங்கள். இது மிகவும் பயனுள்ளதாகவும் திருப்திகரமாகவும் இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்