TNPSC எழுதும் போது இதை கவனிக்க...! "தமிழ் மீடியம்" படித்தவர்களுக்கு அரசு வேலை..!

thenmozhi g   | Asianet News
Published : Mar 17, 2020, 01:47 PM IST
TNPSC எழுதும் போது இதை கவனிக்க...!  "தமிழ் மீடியம்" படித்தவர்களுக்கு அரசு வேலை..!

சுருக்கம்

இந்த சட்டத்தின்படி பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC எழுதும் போது இதை கவனிக்க...!  "தமிழ் மீடியம்" படித்தவர்களுக்கு அரசு வேலை..! 

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.அதற்கான திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து உள்ளார். 

அதாவது இந்த சட்டத்தின்படி பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பட்டமேற்படிப்பு தகுதியை வைத்து அரசு பணியை பெறும்போது 10 மற்றும் 12ஆம்  வகுப்புகளையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்றும், அதேபோன்று பட்டமேற்படிப்பு தகுதிக்கான அரசு பணியில் சேரும்போது பட்டப்படிப்பை தமிழில் படித்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பத்தாம் வகுப்பு தகுதி உள்ள அரசு பணிக்கு தேர்வாகும் போது 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பயின்று இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது

இதற்கு முன்னதாக தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இதுவரை 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. இயதற்கு முன்னதாக பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தமிழ் வழியில் படித்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் இருந்தது. இந்த ஒரு நிலையில் இட ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து இனி தமிழ் வழியில் கல்வி பயின்றால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு பணியில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் இந்த சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதாவை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார் அமைச்சர் ஜெயக்குமார். மேலும் இந்த சட்டத்தின்படி தேர்ச்சி மதிப்பெண் 35-லிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்