Rajinikanth Fitness Secrets : 74 வயதிலும் ஹிட் படங்கள்; பிட்னஸுக்கு ரஜினி செய்யும் அந்த விஷயம் தான் காரணம்!!

Published : Aug 14, 2025, 04:00 PM IST
Rajinikanth

சுருக்கம்

தன்னுடைய 74 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிட்னஸ் ரகசியங்களை இங்கு காணலாம்.

சூப்பர்ஸ்டார் என்றால் சின்னக்குழந்தைக்கு கூட தான் பிடிக்கும். அவரின் ஸ்டைல் முதல் ஆன்மீகம் வரை அனைத்திற்கும் ரசிகர்கள் ஏராளம். பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் அவர் பிடித்திருக்கும் இடத்திற்கு இப்போது வரை இன்னொருவர் வரமுடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான். அது ரஜினிகாந்த் மட்டும்தான் என்று சொல்லுமளவுக்கு அவர் வசீகரமானவர். திரையில் அவரை கண்டால் அரங்கம் அதிரும் விசில்கள் பறக்கும். இன்று (ஆக.14) அவரது நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவருடைய சினிமா திறமை ஒருபக்கம் இருந்தாலும், இந்த வயதிலும் அவரது ஆரோக்கியம் வியக்க வைக்கிறது. இந்தப் பதிவில் தன்னுடைய 74 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிட்னஸ் ரகசியங்களை காணலாம்.

பொதுவாக 74 வயதில் பெரும்பாலானவர்கள் உடல்நலப் பிரச்சினைகளை சந்திப்பார்கள். ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு மட்டும் வயதாகும்போது அவருடைய இளமை திரும்புகிறது என்றுதான் சொல்லவேண்டும். அவரின் எனர்ஜியும், வசீகரமும் குறையவேயில்லை. அவரது வாழ்க்கை முறையும். உணவுப் பழக்கமும் தான் அதற்கு காரணம் என அவரது உடற்பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். ரஜினிகாந்த் இன்றும் பிட்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவரிடம் இரண்டு பழக்கங்கள் இல்லாததுதான். அது மதுவும், புகையும்தான். அவர் மது குடிப்பதில்லை. புகைபிடிப்பதில்லை. இந்த இரண்டும் உடல்நலப் பிரச்சனைகளோடு, வயதான தோற்றத்தையும் விரைவில் ஏற்படுத்தக் கூடியவை. இதை அவர் முற்றிலும் தவிர்த்துவிட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு யோகா செய்யும் பழக்கம் உண்டு. அவர் நாள்தோறும் நடைப்பயிற்சி செய்கிறார். காலையில் தியானம் செய்வது வழக்கமாம். இது அவரது உடல், மனம் இரண்டையும் புத்துணர்வுடன் வைத்துள்ளது. குறிப்பாம அவருக்கு இயற்கை மீது ஆர்வம் அதிகம். தன் பண்ணை வீட்டில் அதிக நேரம் செலவிடுவாராம். தினமும் இயற்கையான சூழலில் தன்னை இணைத்துக் கொள்வதால் அவருக்கு மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் குறைவாகவே சுரக்கிறது. இது பல நோய்களிலிருந்து அவரை விலக்கி வைத்துள்ளது என நிபுணர்கள் நம்புகின்றனர்.

ரஜினிகாந்த் இன்றும் உடல் செயல்பாடுகளில் தவறாமல் ஈடுபடுகிறார். வலிமை பயிற்சிகள், நடைபயிற்சி, உடலை சமநிலையில் வைக்க உதவும் நெகிழ்வுத்தன்மை பயிற்சிகளை செய்கிறார். ரஜினிகாந்த் வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிட அதிகம் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை அவர் சாப்பிடுவதில்லை. குறிப்பாக அதிக கலோரிகள் கொண்ட, செரிக்க கடினமான உணவுகளை தவிர்க்கிறார்.

சீஸ், கொழுப்பு நிறைந்த இறைச்சி, மயோனைஸ், சர்க்கரை, அதிக உப்பு, செயற்கை இனிப்புகள் இதை தொட்டுக் கூட பார்ப்பதில்லை. பருவகால பழங்கள், காய்கறிகள், புரத உணவுகள் போன்ற ஆரோக்கியம் தரும் உணவுகள் சூப்பர்ஸ்டாரின் மெனுவில் எப்போதும் இருக்கும்.

ரஜினிகாந்தின் பிட்னஸும், சுறுசுறுப்பும் வெறும் உடற்பயிற்சிகள், உணவால் வந்தவை அல்ல. அவர் உறவுகளை கையாளும் விதமும் காரணம். ஒருவரின் மனநலன் நன்றாக இருந்தால்தான் உடல்நலமும் சிறப்பாக இருக்கும். சூப்பர்ஸ்டார் எப்போதுமே தொழில்முறை மற்றும் தனிப்பட்ட உறவுகளை கவனமாக கையாளுகிறார். பல நேர்காணல்களில் கூட தன் குடும்பமும், நண்பர்களும் எவ்வளவு முக்கியம் என்பதை பகிர்ந்திருக்கிறார். அவர்களுடன் உரையாட எப்போதும் நேரம் ஒதுக்கிவிடுவாராம். இதுவும் அவரது இளமை உணர்வைப் பராமரிக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் ஆரோக்கியத்தைப் மாதிரியே உணர்ச்சிரீதியான நலவாழ்வும் முக்கியம். அதை சரியாக கையாண்டால் சூப்பர்ஸ்டாரை போல நாமும் ஃபிட்டாக இருக்கலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க