Sukran Perayachi: ஏப்ரல் 27 ஆம் தேதி சுக்கிர பெயர்ச்சி...அடுத்த 30 நாட்களுக்கு இந்த ராசிகளின் காட்டில் பண மழை!

By Anu KanFirst Published Apr 26, 2022, 5:30 AM IST
Highlights

Sukran Peyarchi 2022: ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு செல்கிறார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு நற்பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள் .

சுக்கிர பெயர்ச்சி 2022:

 ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 ஏப்ரல் 27ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு செல்கிறார். இப்பெயர்ச்சியால் மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி நன்மையாக இருக்கும். கணவன் மனைவி இடையே புதிய புரிதலை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. சுயதொழில் செய்பவர்கள் சுயமரியாதை அதிகம் எதிர்பார்ப்பீர்கள். வியாபார விருத்தி உண்டு. வீடு, வாங்கும் யோகம் கிடைக்கும். 

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி நீங்கள் எதிர்பாராத திடீர் மாற்றங்களை சந்திப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பயணங்களின் பொழுது கவனம் தேவை.ஆன்மிக பயணம் செல்லலாம். ஆரோக்கியம் சீராகும். 

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி இந்த நாள் உங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய பயணங்கள் மூலம் புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். வீட்டில் கலகலப்பு உண்டாகும். 

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். சிறப்பான புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். தொட்டது துலங்கும்.

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி இந்த நாள் மகிழ்ச்சியாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பாசப்போராட்டம் ஏற்படும்.  அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள்.

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி நீண்டகால விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பாக்கியம் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் வந்து மறையும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. 

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி புதிய உற்சாகம் பிறக்கும். இதுவரை குழப்பத்தில் இருந்து மீள முடியாமல் இருந்த உங்களுக்கு நல்ல பாதை திறக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பேச்சில் பொறுமை அவசியம். 

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி அதிக நல்ல பலன்களை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக போட்டியாளர்கள் உடைய ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். 

தனுசு: 

தனுசில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி உங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்த கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வந்து சேரும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். 

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சியால் மனம் மகிழும் நல்லநாளாக  அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் முன்னேற்றம் ஏற்படும். கணவன்- மனைவி இடையே அன்னோன்யன் அதிகரிக்கும்.துணிச்சலுடன் செயல்படுவீர்கள். 

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சியால் நல்ல நாளாக இருக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். ஆன்மிக பயணங்கள் அனுகூல பலன் தரும். தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஓய்வு தேவை. ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி இந்த நாள் நல்ல பலன்கள் கிடைக்க இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகள் மீண்டும் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்களை சந்திக்க கூடும். பண வரவு உண்டாகும்.

மேலும் படிக்க...புதன் பெயர்ச்சி நாளில்...இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் ராஜ யோகம்...இன்றைய 12 ராசிகளின் துல்லியமான கணிப்பு....

click me!