புதன் பெயர்ச்சி நாளில்...இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் ராஜ யோகம்...இன்றைய 12 ராசிகளின் துல்லியமான கணிப்பு....

By Anu KanFirst Published Apr 25, 2022, 5:00 AM IST
Highlights

Horoscope: ஜோதிட சாஸ்திரப்படி, புதன் கிரகம் 2022 ஏப்ரல் 25-ம் தேதி அதாவது, இன்று மேஷ ராசியில் இருந்து தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறது.   

ஜோதிட சாஸ்திரப்படி, புதன் கிரகம் 2022 ஏப்ரல் 25-ம் தேதி, அதாவது இன்று மேஷ ராசியில் இருந்து தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறது.   

புதன் பகவான் பகுத்தறிவு, கல்வி, எழுத்து, பேச்சாற்றல், புத்திசாலித்தனம் போன்றவற்றில் சிறப்பான பலன்களை தருபவர். ஆகையால், புதனின் இந்த ராசி மாற்றம் ரிஷபம் மற்றும் துலாம் உள்ளிட்ட பல ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான நாளாக அமையும். எனவே புதனின் ராசி மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அதிர்ஷ்டம் வந்து சேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சுய தொழிலில் வருமானம் பெருகும். விலகியிருந்த சொந்தங்கள் விரும்பி வருவார்கள். 

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு புதன் பெயர்ச்சி சிறப்பான பலன்கள் உண்டு. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிலும் உங்கள் கை ஓங்கும். கடன் தொகை வசூலாகும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். சுய தொழிலில் மேற்கொள்ள நல்ல நேரமாகும். ஆரோக்கியம் மேம்படும். 

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் பெயர்ச்சி நல்ல பலன்கள் உண்டு. நீங்கள் எதிர்பார்த்தது எதிர்பார்த்தபடி நடக்கும். திடீர் பயணம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். 

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு புதன் பெயர்ச்சி அற்புதமான பலன்கள் அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்ததைவிட உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். 

சிம்மம்: 

சிம்மம்: புதனின் மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை-வியாபாரத்தில் பொன்னான வாய்ப்புகளைத் தேடித் தரும். தேவையற்ற முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்கவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தயார் ஆதரவு இருக்கும். பண பலன் உயரும். 

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் பெயர்ச்சி இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். இந்த நாளில் இழுபறியில் இருந்து வந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொலைதூரப் பயணங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டு. பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.  

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு புதன் பெயர்ச்சி தன்னம்பிக்கையை அதிகரித்து காணப்படும். நீங்கள் நினைத்ததை விட அதிக லாபம் காண கூடிய யோகம் உண்டு. புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. 

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு புதன் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். உணவுசுய தொழிலில் ஏற்றம் காண கூடிய அற்புத யோகம் உண்டு. புதிய யுத்திகளை கையாளுவதன் மூலம் முன்னேற்றம் பெறலாம். . இந்த நாள் துணிச்சலான நாளாக இருக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் பிறக்கும். 

தனுசு: 

தனுசில் பிறந்தவர்களுக்கு புதன் பெயர்ச்சி புதிய நபர்களின் அறிமுகம் முன்னேற்றத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு கவனம் தேவை.வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

 மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு புதன் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் நட்புறவை மேம்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். 

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு புதன் பெயர்ச்சி புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும்.  கணவன் மனைவி இடையே ஒற்றுமை பிறக்கும். சக நண்பர்கள் உடைய ஆதரவு கிடைக்கும். 

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் பெயர்ச்சி நீங்கள் எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியத்தை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்காளாக எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க...ஏப்ரல் 25-ம் தேதி நிகழும் புதன் பெயர்ச்சி...கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 5 ராசிகள்...அதில் நீங்களும் ஒருவரா..?

click me!