water bottle disadvantages: நாம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களில் டாய்லெட் சீட்டை விட 40 ஆயிரம் மடங்கு மோசமான பாக்டீரியா இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று வந்த பிறகு மக்கள் தங்களுடைய சுகாதாரம் குறித்து அதிக அக்கறையுடன் இருக்கின்றனர். ஆனால் எவ்வளவு அக்கறை காட்டிய போதும் ஏதேனும் ஒரு விஷயம் சுகாதார சிக்கலில் கொண்டு போய்விடுகிறது. அண்மையில் வெளிவந்த ஆய்வு முடிவில் ஒருமுறை உபயோகித்து விட்டு மறுபடியும் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள் எவ்வளவு சுகாதாரக் கேடானவை என்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த வாட்டர்பில்டர்குரு (waterfilterguru) என்ற இணையதளம் தான் அந்த ஆய்வை செய்தது. அதில் நாம் ஒருமுறை உபயோகப்படுத்திய தண்ணீர் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தும் போது பாக்டீரியா அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாதிரி செக்ண்ட் யூஸ் பாட்டில்கள், டாய்லெட் சீட்டை காட்டிலும் விட 40 ஆயிரம் மடங்கு மோசமான பாக்டீரியாவை வைத்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடல் நலத்துக்கு கேடு
இந்த ஆய்வில் நான்கு வகையான தண்ணீர் பாட்டில்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதை மூன்று தடவை ஆய்வகங்களில் வைத்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் பேசிலஸ் (bacillus), கிராம்-நெகட்டிவ் ராட் (gram-negative rods) ஆகிய இரண்டு வகை பாக்டீரியாக்கள் இருந்தது உறுதியானதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் அவை நல்ல பாக்டீரியாக்களும் இல்லை. அந்த கிராம் -நெகட்டிவ் ராட் எனும் பாக்டீரியாவால் நிமோனியா மாதிரியான கொடிய நோய்கள் உண்டாகும் வாய்ப்புள்ளது. இந்த மாதிரி பாட்டில்களில் வாழ கூடிய பேசிலஸ் பாக்டீரியா, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இதையெல்லாம் அந்த ஆய்வு முடிவுகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.
பாக்டீரியா அளவு..
மறு உபயோகம் செய்யும் தண்ணீர் பாட்டில்களில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை எப்படி கணக்கிட்டார்கள் தெரியுமா? அதற்கு காலனி-உருவாக்கும் அலகுகளான CFUs தான் எடுத்து கொள்ளப்பட்டது. அந்த கணக்குப்படி பார்க்கும்போது 1 தண்ணீர் பாட்டிலில் கிட்டத்தட்ட 30 மில்லியன் CFU-கள் அதிகம் இருப்பதாக தெரியவந்தது. ஆனால் ஒரு டாய்லெட் சீட்டில் சராசரியாக 515 CFU-கள் தான் இருக்கும். அட கொடுமையே.. அப்படியானால் மீண்டும் உபயோகம் செய்யும் தண்ணீர் பாட்டில்களில் பாக்டீரியா எவ்வளவு அதிகம் உள்ளது பாருங்கள். கிட்டத்தட்ட 40 ஆயிரம் மடங்கு என ஆய்வு சொல்வது வெறும் வார்த்தைகள் அல்ல.
இதையும் படிங்க: Health tips: மீல் மேக்கரில் இப்படி 1 ஆபத்து இருக்கு.. சுவைக்காக அடிக்கடி சாப்பிட்டால் இந்த பாதிப்புகள் வரும்
ஆனால் நுண்ணுயிரியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் சைமன் கிளார்க் கொஞ்சம் பதற்றத்தை குறைக்கும் வகையில் பேசுகிறார். அதாவது இந்த பாட்டிலில் இருக்கும் பாக்டீரியா நம் வாய்க்குள் இருக்கும் பாக்டீரியாவை போன்றது தானாம். அதனால் நோய்வாய்ப்பட பெரிதாக வாய்ப்பில்லை, இதுவரை அப்படியாக எந்த பாதிப்பும் பதிவாகவில்லை என அவர் கூறுகிறார். ஆனால் நாம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒருமுறையாவது சோப்பு நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: Summer health tips: வெயில் காலத்தில் வரும் சரும நோய்களுக்கு முற்றுப்புள்ளி! இந்த 4 விஷயங்களை கட்டாயம் பண்ணுங்க