ஒத்த பிள்ளையை காவு வாங்கியது   குர்குரேவா...? நீடிக்கும்  மர்மம் ....!!!!

Asianet News Tamil  
Published : Dec 01, 2016, 07:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
 ஒத்த   பிள்ளையை   காவு வாங்கியது   குர்குரேவா...?    நீடிக்கும்  மர்மம் ....!!!!

சுருக்கம்

மாணவனின்  மரணத்திற்கு  காரணம்  குர்குரேவா...? நீடிக்கும்  மர்மம் ....!!!!

இரண்டு நாட்களாக ,   வைரலாக பரவும்  ஒரு விஷயம்  பன்னிரெண்டாம்  வகுப்பு படிக்கும் மாணவனின்  சிரிஷ் சேவியோ.... அடையாரில்  உள்ள  தனியார்  பள்ளியில்  படித்து  வந்த இவர்,   நேற்று   முன்தினம் , குர்குரே சாப்பிட்டுள்ளர். இதனை  தொடர்ந்து,   அஜீரண கோளாறு  காரணமாக  பின்னர்,  ஈனோ அருந்தியுள்ளார்.

ஈனோ அருந்திய , சில  நிமிடத்தில்  மாணவனுக்கு  வலியுடன் கூடிய  ரத்த வாந்தி  வந்துள்ளது....

அதிர்த்து போன  பெற்றோர்கள்,   அருகில் உள்ள  பிரபல  மலர்  மருத்துவமனைக்கு  அழைத்து சென்றதாக  தெரிகிறது. ஆனால் மாணவனை  பரிசோதித்த  மருத்துவர்கள்,  ஏற்கனவே  மாணவன்  உயிரிழந்ததாக  தெரிவித்துள்ளனர்.

துக்கத்தில்  கதறிய  பெற்றோர்கள் , அவரின்  குடும்ப  நண்பரான பிரபல   இசைஅமைப்பாளர்   ஜேம்ஸ் வசந்தன் அவர்களிடம்  தெரியப்படுத்த , மாணவனின்  மரணம்  குறித்த விவரத்தை , சமூக வலைத்தளமான  பேஸ்புக்கில்  பதிவிட்டுள்ளார்.   

இந்த  பதிவை  அடிப்படையாக  வைத்து  பலரும்  இதனை  வியப்போடு  பகிர்ந்து  வந்தனர். ஆனால் மாணவனின்  மரணம்  குறித்து  பெற்றோர்கள்  எந்த  கருத்தும் தெரிவிக்கவில்லை . அதே  சமயத்தில்  காவல்  நிலையத்திலும்  புகார்  அளிக்கவில்லை என  தெரிகிறது.

இது குறித்து  இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனிடம் கேட்ட போது , “தான்  உண்மை   சம்பவத்தை  தான்  பதிவிட்டேன். ஆனால் தற்போது,  மாணவனின்  பெற்றோர்கள்  கேட்டதற்கிணங்க , அந்த  பதிவை  தன்னுடைய  பேஸ்புக் பக்கத்திலிருந்து  நீக்கி விட்டதாக   சொல்கிறார்....”

எது எப்படியோ ..... அந்த  மாணவன்  உயிரிழப்புக்கு  காரணம்  தான்  என்ன ...?பெற்றோர்கள்  ஏன்  இது குறித்து   பேச  மறுக்கிறார்கள் ...? என  பல  கேள்விகள் நீள்கிறது.....

இருந்தாலும், அந்த  மாணவன்  குர்குரே சாப்பிட்டது உண்மை ......ஈனோ அருந்தியது  உண்மை.......

நம்  வாழ்க்கைமுறைக்கு  இதெல்லாம்  பாடமும்  கூட.......!

 குறிப்பு :இந்த மாணவன் பெற்றோர்களுக்கு  ஒரே ஒரு மகன்  என்பது  குறிப்பிடத்தக்கது......

 

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
சிங்க் பக்கத்தில் இதை வச்சா கிருமி டபுள் ஆகும்.. ஆபத்தான 5 பொருட்கள் இதுதான்