“நாடா புயல்“ பீதியால் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்...!!! பள்ளிகளுக்கு அதிரடி விடுமுறை...!!!

First Published Nov 30, 2016, 6:49 PM IST
Highlights


“நாடா புயல்“ எச்சரிக்கை...!! பீதியில் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்...!!! பள்ளிகளுக்கு அதிரடி விடுமுறை...!!!

நாடா புயல் காரணமாக, இன்று நாள்  முழுவதும்  வானம்  மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில்,பொதுவாகவே  மழை  பெய்ய தொடங்கிய உடன், மழையின் தீவிரத்தையடுத்து பள்ளி  கல்லூரிகளுக்கு விடுமறை  அளிப்பது வழக்கம் .

ஆனால்,  தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள, ‛நாடா' புயல், டிசம்பர் 2ம் தேதியன்று  புதுச்சேரி மற்றும் வேதாரண்யம் இடையே, கடலூர் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாடா புயலால் ,  பலத்த  மழை  பெய்யும்  அபாயம்  இருப்பதாக, வானிலை  ஆய்வு  மையம்  தெரிவித்துள்ளது.

இதனையொட்டி  முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக, 5 கடலோர மாவட்டங்களில்            ( சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, விழுப்புரம் ) உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், நாளையும், நாளை மறுநாளும் அதிரடியாக விடுமுறை அளித்து பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.

 

மேலும்   காரைக்கால்,  பாண்டிசேரியில்  உள்ள  பள்ளிகளுக்கும்  விடுமுறை  அளிக்கபட்டுள்ளது.

இதனால், சென்னையில் நாளை அதிகாலை முதல் மழை பெய்ய துவங்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,  தற்போது  பொதுமக்கள்  பீதி அடைந்துள்ளனர்.

மழையுடன்  கூடுதலாக 65 km வேகத்தில்   காற்றும்  வீசும்  என  தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள்  அதிர்ச்சியில்  உள்ளனர்.....

 

குறிப்பாக  மழை  வரும்  முன்பே , அதிரடியாக  இரண்டு நாட்களுக்கு  பள்ளிகளுக்கு  விடுமுறை  அளிக்கபட்டுள்ளதால் , பொதுமக்களிடையே  ஒரு அதிர்ச்சி  நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த  அறிவிப்பை தொடர்ந்து தற்போது,  சென்னையிலிருந்து  பொதுமக்கள் தங்கள்  சொந்த ஊர்களுக்கு   படையெடுக்க தொடங்கியுள்ளதால்,  கோயம்பேடு  பேருந்து நிலையத்தில் ,  பாதுகாப்பை  பலப்படுத்தும்  விதமாக   கூடுதல்  போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்  என்பது  குறிப்பிடத்தக்கது......

 

click me!