
சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் கிரீன் டீ : எய்ம்ஸ் மருத்துவா்கள்!
நாள்தாேறும் கிரீன் டீ குடிப்பதன் மூலமாக, புற்றுநோய் மருந்தால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பை எளிதாக தவிர்க்கலாம் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாகவே டீ வகைகளில் க்ரீன் டீ, ctc டீ என்று இருவகை உண்டு. ctc டீ தான் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானது. ஆனால் சீன மக்களிடையே தொன்று தொட்டு பாரம்பரியமாக தொடர்ந்து வருவது க்ரீன் டீ. அதன் மருத்துவ குணத்தால், இப்போது நம்மிடையேயும் பிரசித்தி பெற்றுவருகிறது. சுத்தமான தேயிலை கொழுந்தில் இருந்து தயாரிக்கப்படும் பொடி கிரீன் டீ ஆகும். இதில், அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடன்ட் எனப்படும் உடலுக்குத் தேவையான எதிர்ப்புச்சத்துகள் மற்றும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய புரதங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ள்ளன.
இந்த கிரீன் டீ நாள்தாேறும் அருந்துவதால், உடலுக்கு பல்வேறு பயன்கள் கிடைப்பதாக, ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், புற்றுநோயாளிகளுக்கு ஏற்படும் சிறுநீரக பாதிப்பை எப்படிச் சரிசெய்வது என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
இதன்படி, புற்றுநோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்தில், சிஸ்பிளாட்டின் என்ற வீரியமிக்க ரசாயனம் உள்ளது. இது அதிகளவில் உட்கொள்ளப்படும்போது, புற்றுநோயாளிகளின் உடலில் சென்று, சிறுநீரகத்தில் அதிகப்படியாக சேர்ந்து, அதனை நச்சுப்படுத்துகிறது.
இதைச் சமாளிக்க, தினந்தோறும் நோயாளிகளுக்கு கிரீன் டீ கொடுப்பதால், எவ்வித பக்க விளைவும் இல்லாமல், புற்றுநோய் மருந்துகள் சிகிச்சை அளிக்கப் பயன்படுவதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், கிரீன் டீ இயல்பாகவே, அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு, அதில் உள்ள துவர்ப்புச் சத்து மூலமாக, சிறுநீரகம், கல்லீரல் போன்றவை பலம்பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.