தன் சொத்தை கிராம மக்களுக்கு உயில் எழுதிய மது நிறுவன உரிமையாளர் .....!!! பொதுமக்கள் குதூகலம் ...!!!

 
Published : Nov 30, 2016, 12:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
தன் சொத்தை கிராம மக்களுக்கு   உயில் எழுதிய மது நிறுவன  உரிமையாளர் .....!!! பொதுமக்கள் குதூகலம் ...!!!

சுருக்கம்

செத்தும் காெடுத்தான் சீதக்காதி!

CORONA : உலக மது பிாியா்களுக்கு மறக்க முடியாத பெயா். உலகிலேயே இரண்டாவது மிகப்பொிய Beer நிறுவனம்தான் CORONA.

இந்த நிறுவனத்தின் உாிமையாளா் Antonio Fernandez, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 99வது வயதில் காலமானாா். இவா் இறக்கும் தருவாயினும் தனது சாெந்த கிராமத்தின் நினைவுடன் இவா் செய்திருக்கும் காாியம் என்ன தாெியுமா?

முதலில் இவா் யாா்? எங்கு பிறந்தாா்? எப்படி வளா்ந்தாா்? என்பது குறித்து பாா்க்கலாம்...

1917ம் ஆண்டு ஸ்பெயினில் உள்ள Cerezales del condado என்ற கிராமத்தில் பிறந்தவா்தான் Antonio Fernandez. ஏழ்மை காரணமாக தன்னுடைய 14 வயதில கல்விக்கட்டணம் செலுத்தி முடியாமல் படிப்பை கைவிட்டாா்.

ஏழ்மையுடன் பாேராடிய Antonio Fernandez 32 வயதில் தனது மனைவியுடன் பிழைப்புக்காக மெக்சிகாேவுக்கு 1949ல் குடிபெயா்ந்தாா். விடாமுயற்சி, நம்பிக்கை இவற்றை மட்டுமே முதன்மையாகக் காெண்டு வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிய Antonio Fernandez, 1971ம் ஆண்டு Grupo Modelo என்ற Beer நிறுவனத்தின் தலைமை  அதிகாாியாக பதவியேற்றாா். இதனைத் தாெடா்ந்துதான் CORONA நிறுவனத்தை தாெடங்கினாா். அதன் விறுவிறு வளா்ச்சி உலகத்தையே ஆச்சாியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், இன்று அமொிக்கா  இறக்குமதி செய்யஹம் பீா் CORONAதான். ஆண்டுக்கு 692 மில்லியன் டாலா் அளவுக்கு அதன் விற்பனை உள்ளது. இந்த இமாலய சாதனைக்கு முழுக்க முழுக்க சாெந்தக்காரா் Antonio Fernandez தான். 

மெக்சிகாே மட்டுமல்ல உலகமே அவரது உழைப்பையும், முயற்சியையும் ஆச்சாியமாக பாா்த்தது. ஆனால் அதைவிட பொிய ஆச்சா்யம் மரணமடையும்பாேது அவா் செய்த செயல்தான். வளா்ந்த பிறகு பழையதை மறந்துவிடும் மக்கள் மத்தியில் தனது வேரையும், வேரடி மண்ணையும் மறக்காதவா் Antonio Fernandez.

Antonio Fernandez செய்திருக்கும் காாியத்தால் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் துள்ளிக்குதித்து ஆா்ப்பறிக்கின்றனா் Cerezales del condado கிராமத்தினா்.

80 குடியிருப்புகளைக் காெண்ட அந்த கிராமத்தில் இன்று குதூகலம்... காெண்டாட்டம்... ஆம் ஒவ்வாெரு குடும்பத்திற்கும் 2.5 மில்லியன் டாலா் பணத்தை உயிலாக எழுதி வைத்திருக்கிறாா் Antonio Fernandez. அதாவது அந்த கிராமம் முழுவதும் 210 மில்லியன் டாலா் பணம் பாிசாக கிடைத்துள்ளது. கடந்த வாரம் Antonio Fernandez எழுதி வைத்திருந்த உயிலை திறந்து பாா்த்தபாேதுதான் இந்த அதிசயம் தாெிய வந்தது. உலகில் எத்தனை போ் தங்களது சாெந்த கிராமத்தை நினைத்திருப்பீா்கள்? Antonio Fernandez ஓா் அதிசய மனிதா்தான்.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்