
உங்க மனைவி உங்கக்கிட்ட அன்பா இல்லையா....? இது இது தான் காரணம் .....!!!
அலுவலகத்தில் இருந்து, வீட்டிற்கு சென்றாலே, மனைவி தொல்லை தாங்க முடியாது... எப்பவும் கத்திகிட்டே இருப்பா.....வீட்டிற்கு போகணும்னு நினைச்சாலே எரிச்சலா இருக்குனு புலம்பும் கணவராவரா நீங்கள் ...?
கவலை வேண்டாம்.....இதை ட்ரை பண்ணுங்க போதும்....
1. வீட்டிற்கு போகும் போது , மனைவிக்கு கால் செய்து “ உனக்கு ஸ்வீட் வாங்கி வரவா என அன்பா கேளுங்க....போதும் . வாங்கி போகணும்னு கூட அவசியம் இல்லை . கேட்டால் மட்டும் போதும்.....
2. பிறந்த நாட்களுக்கு பரிசு வாங்கி கொடுத்து அசத்துங்க
3. இரவு நேரத்தில் பாத்திரம் சுத்தம் செய்து கொடுங்கள்....
4. புதிய ஆடைகளை அணிந்து வரும்போது வைத்த கண் வாங்காமல் பார்ப்பது. நீ இந்த ட்ரஸ்ல சூப்பரா இருக்க என்று பாராட்டு தெரிவிக்கவேண்டும். எப்பவும் முகத்தை கோபமாக வைத்து கொள்ளாமல், அவ்வப்போது அல்லது மனைவியை பார்க்கும் போதாவது சிரித்து வையுங்கள்.
5. சின்ன சின்ன வீடு வேலையை செய்யுங்கள்.....
6. சமையலறை சாமான்கள் நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம், சீனி, காபித்தூள் போன்ற சாமான்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.
7.அப்பப்ப அவங்களுக்குப் பிடித்த சமோசா, பப்ஸ் வாங்கி குடுங்க .....
8. வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒருநாளாவது ஓட்டல், சினிமா, பார்க், பீச் என்று அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்!
9.குழந்தைகளை நல்லா கவனிங்க....
10. மனைவியின் சமையலை குறை சொல்லாதீங்க .....
11. மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள்.பேசி முடித்தவுடன் , இப்ப என்ன சொன்ன ...னு கிண்டலா கேட்க வேண்டாமே.....!
12. பூ வாங்கி குடுங்க.....
இதை எல்லாம் செய்வதற்க காசா பணமா.......நல்ல உள்ளம் போதுமே.....
அன்பும் அரவணைப்பும் சரியாக இருந்தால்........ எல்லாமே சரியாகி விடும்......
உண்மையான அன்பை வெளிப்படுதுங்க........செயற்கையா நடிக்க வேண்டாமே...!!
ஒரே ஒரு நாள் இது போன்று அன்பா இருந்துவிட்டு, அடுத்த நாளே உங்கள் சுபாவத்திற்கு மாறிவிட்டால் , மனைவி உங்களிடம் எரிஞ்சி விழாம என்ன செய்வாள்.......?
.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.