BE ALERT: ப்ளூவேல் விட மோசமான “பிளாக்கா”..! அதிர்ச்சி கொடுக்கும் மற்றொரு "குண்டு "

First Published Oct 6, 2017, 9:31 AM IST
Highlights
spreading blocka in us and all over the world


BE ALERT: ப்ளூவேல் விட மோசமான “பிளாக்கா”..!

தொழில் நுட்பம் வளர வளர அதனால் ஏற்படும் பாதிப்புகளும் மிக அதிகமான அளவில் தான் உள்ளது என நினைக்க தோன்றுகிறது.

Latest Videos

ஒரு உயிரையே பறிக்கக்கூடிய கொடுமையான விளையாட்டான ப்ளூ வேல் சமீபத்தில் உலகையே உலுக்கியது. இதற்கு அடுத்த படியாக வேறு ஒரு உருவத்தில் உயிரை பறிக்கும் பிளாக்கா என்ற போதைபொருள் அறிமுகம் ஆகியுள்ளது

போதைபொருள் தானே..அதுதான் ஏற்கனவே இங்கேயே கடைகளில்  கிடைக்கிறதே என அசால்டாக சொல்லிவிட முடியாது.

காரணம் இந்த போதை பொருள் பயன்படுத்தினால், உடலில் அதிக அளவில் வெப்பத்தை(105 டிகிரி பாரனேட்) உருவாக்கும். சில மணி நேரத்திற்கு மட்டுமே நீடிக்கும் இந்த வெப்பம் மனித மன நிலையில் பல  மாற்றத்தை கொண்டு வந்து, உயிரையே எளிதில் மாய்த்துக் கொள்ளும்  எண்ணத்தையே வர வைக்கிறது என்பது தான் உண்மை

தற்போது வரை அமெரிக்காவில் பிளாக்கா என்ற போதைப்பொருளுக்கு 20 பேர் தற்கொலை செய்துள்ளனர்.மேலும், 200க்கும் அதிகமானோர் பிளாக்கா என்ற போதைப்பொருளை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளன. 

பிளாக்காவை எப்படி இருக்கும்? எப்படி பயன்படுத்துகிறார்கள் ?

ஆல்பா பிவிபி என்ற வேதிப்பொருளின் கலவையில் உருவானது தான்  இந்த பிளாக்கா....இது பார்ப்பதற்கு கட்டி உப்பு போன்று   இருக்குமாம்.இதனை புகை பிடித்தல் மூலமாகவும்,கரைசலாக மாற்றி ஊசி மூலம் உடலினுள் செலுத்தியும் போதையை வரவழைத்து கொள்கின்றனர்

ஒருமுறை உட்கொண்டால்,அவர்கள் செய்யும் வேலை என்ன தெரியுமா?

நிர்வாணமாக ஓடுதல்

திடீரென வாகனங்களின் குறுக்கே சென்று விழுதல்

சக்திமான் போல் நினைத்து கொண்டு பறக்க முயற்சி செய்து இறப்பது

மாடியில் இருந்து குதிப்பது

மரங்களுடன் உறவு கொள்வது போல் ஆடையை களைந்து சில அறுவருக்க தக்க செயல்களில் ஈடுபட்டு மற்றவர்களையும் முகம் கோண வைப்பது ..

இது போன்ற எண்ணிலடங்கா செயல்களை செய்து உயிரை மாய்த்து கொள்வது தான் கடைசியில் நடக்கும்

இதுவரை அமெரிக்காவில் மட்டும் 20 பேர் இறந்துள்ளதாகவும், மேலும்  பலர் இதற்கு அடிமையாகி உள்ளதாகவும் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் நம் மக்களுக்கு நல்லதை விட கெட்டது தானே  மிக விரைவில் மனதில் உள்வாங்குவார்கள்...தற்போதைய நிலவரப்படி, இந்த பிளாக்கா பல நாடுகளில் உள்ளவர்களும் பயன்படுத்துவதாக  தகவல் வெளியாகி உள்ளது

எனவே இது போன்ற  தீய  செயல்களில் யாரும் ஈடுபட கூடாது  என்பதே அனைவரின் நோக்கமும் ....

 

click me!