
துரதிஷ்டமான 13 .......
"எல்லாம் சிவ பயமே"என்பதற்கேப்ப ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயத்தில் பயம் இருக்கும். சிலரது பயம் வினோதமாக இருக்கும்.ஒருவருக்கு சிலந்தி என்றால் பயம், சிலருக்கோ பாம்பு ,கூட்டம் ,உயரம்,இருட்டு ,இடி என பல விதமான பயங்கள் இருக்கும் .அப்படி ஒரு பயம் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.
13 என்ற எண்ணை பார்த்தால் பயம். ஆம் அப்படி ஒரு பயத்தின் பெயர் தான் "ட்ரிஸ்கைதேகாபோபியா"(triskaidekaphobia)
ட்ரிஸ் என்றால் கிரேக்க மொழியில் 3 எனவும் ,தேகா என்றால் 10 எனவும் ஆகமொத்தம் 13 ,போபியா என்றால் பயம் என்று அர்த்தம்.
இந்த போபியா நம்பப்பட்ட பல ருசிகர தகவல்கள் உள்ளன.அவற்றில் சில அப்பல்லோ 13 விண்கலம்,ஏப்ரல் 11,1970ல்,கிளம்பிய மூன்றாம் நாளான 13ஆம் தேதி ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பூமிக்கு தரையிறக்கப்பட்டது.வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி ,புனித வெள்ளி இவ்வாறு கிறிஸ்துவ மதத்திலும் இயேசுவை காட்டி கொடுத்த ஜூடாசும் இயேசுவின் "லாஸ்ட் சப்பர்" இதில் அவருடைய டேபிலிலும் 13ஆம் நம்பர் என்பதால் கிறித்தவர்களும் 13 என்றால் துரதிஷ்டம் என நம்புகிறார்கள்.ஐயர்லாந்தில் வாகன நம்பர் பிளேட்டில் கூட 2013 ஆண்டில், முதல் 6 மாதத்திற்கு 131 எனவும் அடுத்த 6 மாதத்திற்கு 132 எனவும் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளன.
அதே வேளையில், இதற்கெல்லாம் விதி விலக்காக 13 ஆட்கள் மற்றும் அவர்களது பிராத்தனையை வைத்து தொடங்கப்பட்ட "கோல்கேட் யூனிவர்சிட்டி" 13 என்பதை அதிர்ஷ்டமான எண்ணாகவே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எண்களில் பயம் என்பது வினோதமாக இருந்தாலும் இவை அதிர்ஷ்டம், துரதிஷ்டம் தரக்கூடியவை என்பது அவரவர் நம்பிக்கையிலே உள்ளது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.