சென்னையில்  அபார்ட்மெண்ட்ஸ் வாழ்க்கை இதுதான்...! ஒரு ரவுண்டு பார்க்கலாம் வாங்க...

 
Published : Oct 05, 2017, 01:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
சென்னையில்  அபார்ட்மெண்ட்ஸ்  வாழ்க்கை இதுதான்...! ஒரு ரவுண்டு பார்க்கலாம் வாங்க...

சுருக்கம்

chennai appartments life which it reveals

சென்னையில்  அபார்மென்ட்ஸ் வாழ்க்கை இதுதான்...! ஒரு ரவுண்டு பார்க்கலாம் வாங்க....

பொதுவாகவே பெரும்பாலான மக்கள் நினைப்பது என்னவென்றால் சிட்டி லைப் எவ்வளவு ஜாலியாக இருக்கும் என்பதே.....

சொந்த ஊரில்,சொந்த வீட்டில்,சொந்தங்களோடு, தூய்மையான காற்றை  சுவாசித்து,வாகனங்களின் இரைச்சல் இல்லாத வாழ்க்கை, நிம்மதியான மன நிலைமை...இதெல்லாம் நம் சொந்த ஊரில் தான்

இதற்கெல்லாம் மாறுபட்டது தான் சிட்டி லைப். அதுவும் சென்னையை  எடுத்துக்கொண்டால், இடத்தை வாங்கும் அளவிற்கு பணம் இருந்தாலும் இடம் இருக்காது வாங்குவதற்கு....

அப்படியே வாங்கினாலும்,அபார்ட்மெண்ட்ஸ் தான் வாங்க முடியும்...

சரி அப்படி என்னதான் இருக்கு இந்த அபார்ட்மெண்ட்ஸ் லைப்லனு பார்க்கலாம்

அடுக்குமாடி குடியிருப்புகளில், பிளாக் மட்டும் தான் மாறி இருக்கும். அறைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக தான் இருக்கும்.காரணம் தனி வீடு என்றால் நம் இஷ்டத்திற்கு வீடு கட்டலாம்.ஆனால் அபார்ட்மெண்ட்ஸ் அப்படி இல்லையே......

அடுத்து,அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிபவர்களுக்கு, தண்ணீர் சப்ளை முதல்  பால் சப்ளை வரை அனைத்தும் வீடு தேடி வரும்.எதை வாங்க வேண்டும் என்றாலும் நாம் வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை

பாதுகாப்பு

பாதுகாப்பு பற்றி நாம் கவலை பட வேண்டிய அவசியமே இல்லை....காரணம்  அந்த அளவிற்கு செக்யூரிட்டிகள் இருப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின்  ஒட்டுமொத்த தேவையை பூர்த்தி செய்ய ஒரு அசோசியேஷன்  உருவாக்கி அதன் மூலம் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வார்கள்

இதற்கு அடுத்தபடியாக, கார் பார்கிங் இடம் ஒவ்வொரு குடியிருப்பு வாசிகளுக்கும் உண்டு....

வேறு என்ன சிறப்பு இருக்கு என்ன கேட்கிறீர்களா ?

இன்டோர் கேம்ஸ் முதல் அவுட்டோர் கேம்ஸ் வரை அனைத்தும் விளையாட  வசதியாகவும்...

ஏதாவது விழா, உதாரணத்திற்கு பிறந்த நாள் என்றால்.அதற்காக வெளியில் சென்று ஹால் புக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கம்யூனிட்டி ஹால் இதற்காகவே தனியாக உள்ளது

திரைப்படம் பார்க்க வேண்டுமா ..?

தியேட்டர்கு சென்று தான் திரைப்படம் பார்க்க வேண்டும் என்பது அவசிய இல்லை. இதுவும் உள்ளவே இருக்கு

குளிக்க நீச்சல் குளம்

குளிக்க பாத் ரூம் எல்லாம் ஓல்ட் ஸ்டைல் ஆகிவிட்டது.அதற்கு பதில் ஆண்கள் பெண்கள் என இருபாலரும் தனி தனியாக பயன்படுத்த நீச்சல் குளம்  அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ரீம் பாத்

இதெல்லாம் விடுங்க,.....நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு முன்னதாக ஸ்டீம் பாத்  எடுக்கும் வசதி கூட உள்ளது

உடற்பயிற்சி

உடலை கட்டுகோப்பாக வைத்துகொள்ள ஜிம் உள்ளவே உள்ளது. தொப்பையை  குறைக்கவும் செய்யலாம்.உடலை மெலிதாக்கவும் செய்யலாம்

வாக்கிங் போக தனி இடம்

வாக்கிங் போக தனி ரோடே அமைத்து இருப்பார்கள். உள்ளவே வாக்கிங் போகலாம். பேசிக்கொண்டே ஜாலியா நடந்து வரலாம்.....

முதலுதவி /அவசர சிகிச்சை

மிக மிக முக்கியமான முதலுதவி முதல் அவசர  சிகிச்சை செய்வதற்கு  தேவையான அனைத்து உபகரணங்களும் அடங்கிய ஒரு நர்சிங் ஹோமோ அல்லது கிளினிக்கோ உள்ளவே உள்ளது

ஆடி பாடி மகிழ அடிக்கடி விழா தான்

இதையும் தாண்டி,ஆடிபாடி மகிழ ஆனந்தமாய் வாழ, எதை தேடியும் வெளியில் செல்லாமல், அனைத்தும் இருந்த இடத்தில அமர்ந்தபடியே பெற்று , ஸ்மார்ட்டான வாழ்க்கை வாழ ஏற்றது தான் இந்த அபார்ட்மெண்ட்ஸ் வாழ்க்கை

குறிப்பு

எதிர் வீட்டில் வசிப்பவர்கள் கூட, நம் மனதில் நிற்காத அளவிற்கு ஆண்டிற்கு  சில முறை மட்டுமே அவர்களை  பார்த்திருக்கும் அனுபவம் இங்கு தான்  கிடைக்கும்

இதுதான் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தால் நமக்கு கிடைக்கும்  அனுபவங்கள்...அப்படியே நீங்களும் இமேஜின் செய்யுங்கள்....பிடித்திருந்தால்  இந்த வாழ்கையை வாழ ட்ரை பண்ணுங்க....பிடிக்கவில்லை என்றால்,அப்படியாக சங்கதி என அமைதியாக இருங்கள்.....

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Peaceful Living Habits : மனசுல நிம்மதியே இல்லையா? இந்த '7' விஷயங்களை பண்றீங்களா??
Coconut Milk for Kids : பெற்றோரே! ஒல்லியா குழந்தைகளை கொழு கொழுனு மாற்ற சூப்பர் வழி! தேங்காய் பால் போதும்!