ரயில் டிக்கெட் முன்பதிவில் இப்படி ஒரு மாற்றமா..? மக்கள் செய்ய வேண்டியது என்ன..?

By ezhil mozhiFirst Published Mar 14, 2020, 1:08 PM IST
Highlights

ரயில்வே துறையில் கடந்த 12 ஆண்டுகளில், 50 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய அரசு முடிவு செய்தது. எல்லா நிதியையும் அரசே முதலீடு செய்தால் மற்ற நலத்திட்ட சேவையை மக்களுக்கு அளிப்பதில் சிரமம் ஏற்படும். 

ரயில் டிக்கெட் முன்பதிவில் இப்படி ஒரு மாற்றமா..? மக்கள் செய்ய வேண்டியது என்ன..? 

மக்களுக்கு பயன்பெறும்  வகையில் ரயில்வே துறையில் பல் சேவைகளை மேம்மபடுத்துவதற்காக திட்டம் வகுத்து வருவதால் தனியார் பங்களிப்பும் முக்கியம் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், மக்களவையில் தெரிவித்தார் 

அதன்படி ரயில்வே துறையில் கடந்த 12 ஆண்டுகளில், 50 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய அரசு முடிவு செய்தது. எல்லா நிதியையும் அரசே முதலீடு செய்தால் மற்ற நலத்திட்ட சேவையை மக்களுக்கு அளிப்பதில் சிரமம் ஏற்படும். இதன் காரணமாக மக்களுக்கு சிரமத்தை கொடுக்கும் வகையில் வரியையும் கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படும்.

எனவே தனியார் துறைகளை, இதில் பயன்படுத்தும்போது வசதிகளை பெருக்க முடியும், செலவும் குறைவாகும். இதன்காரணமாக ரயில்வே துறையை மேலும் பலப்படுத்தி விரிவாக்கத்திற்கு மேலும் பயன் தரும் என குறிப்பிட்டு இருந்தார்.

அப்போது தொடர்ந்து பேசிய அவர், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் தனியார் மையங்களையும், ஏஜெண்டுகளையும் தடை செய்வது குறித்து மும்மரமாக மத்திய அரசு யோசனை செய்து வருகிறது என்றும் பொதுமக்களைப் பொறுத்தவரை அவரவர் தங்கள் செல்போன் வாயிலாகவே டிக்கெட்டை மிக எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது அரசாங்கம் நடத்துகிற பொது சேவை மையங்களை நாடி முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்.

எனவே இனி வரும் காலங்களில் ரயில்வே ஏஜெண்டுகள் மூலம் முன்பதிவு செய்ய கூடிய நிலை மாறி அவரவர் தானாகவே தங்கள் மொபைல் போன் மூலமாகவே மிக எளிதாக முன்பதிவு செய்து கொண்டு பயணம் செய்யக்கூடிய நிலை விரைவில் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!