Snakes Eat Snakes : உலகத்தில் சில வகை பாம்புகள், தங்கள் இனத்தையே விழுங்கக்கூடிய வினோத பழக்கத்தை வைத்துள்ளது. அது ஏன் என்பது குறித்து இப்பொது பார்க்கலாம்.
உலக அளவில் சுமார் 3,000 மேற்பட்ட வகையான பாம்புகள் இருக்கின்றன, ஆனால் இவற்றில் வெகு சில இனங்களை தங்களுடைய சொந்த இனத்தை சேர்ந்த பாம்புகளையே உணவாக உட்கொள்ளும் பழக்கத்தை வைத்திருக்கிறது. குறிப்பாக இந்தியா, தெற்கு சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் சில வகை பாம்புகள் இந்த விஷயத்தை கையாளுகின்றன.
Ophiophagy என்றால் என்ன?
தனது இன பாம்புகளை தாங்களே உண்ணும் பழக்கத்தை தான் Ophiophagy என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவை பொருத்தவரை சுமார் 18 அடி நீளம் வரை வளரக்கூடிய ராஜ நாகங்கள் தங்களுடைய இனத்தையே உண்ணும் பழக்கத்தை Ophiophagy பாம்புகளாகும். தங்களுடைய எல்லையை பாதுகாக்கவும், தொடர்ச்சியாக அதிக அளவில் தங்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும் தங்களை விட அளவில் சிறிய நாகங்களை அவை விழுங்கி கொல்லும் பழக்கத்தை கொண்டுள்ளது.
FeFe Dog Perfume | நாய்களுக்காக ரூ.9000க்கு பெர்ஃப்யூம்! ஒரு இடத்தில் மட்டும் அடிக்கக்கூடாது!
சில நேரங்களில் ராஜநாகங்கள் போன்ற மெல்லிய உடல் கொண்ட பாம்புகள் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்காவை சேர்ந்த ராக் பைதானும் கூட இதே விஷயத்தை பலமுறை செய்திருப்பதாக ஆவணங்கள் காட்டுகின்றது. உணவு பற்றாக்குறை, தங்களுடைய ஆதிக்கத்திற்கு கீழ் இருக்கும் இடத்தை தாங்களே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் மற்றும் மனச்சோர்வு காரணமாக கூட இந்த ராக் பைத்தான்கள் தனது இனத்தையே கொல்லுமாம்.
உலக அளவில் ஆப்பிரிக்க ராக் பைத்தான்கள் தான் மிகப்பெரிய இனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவை 20 முதல் 25 அடி வரை வளரக்கூடியது, ராஜநாகம் போன்ற மிகப் பெரிய நாகங்களை கூட எளிமையாக இவற்றால் வீழ்த்தி விட முடியும். அதே போல அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள ஈஸ்டர்ன் கிங் ஸ்நேக் கூட இந்த பழக்கத்தை கொண்ட பாம்புகளாம்.