இன்று பல கோடிகளுக்கு அதிபதி.. ஆனால் இளம் வயதில் அப்படியல்ல - நீத்தா அம்பானியின் பால்ய வாழ்கை எப்படி இருந்தது?

By Ansgar R  |  First Published Aug 12, 2024, 8:59 PM IST

Nita Ambani : இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி என்றாலும், இளம் வயதில் ஆடம்பரம் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர் தான் நீத்தா அம்பானி.


பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி, உலகின் மிகவும் புகழ்பெற்ற செல்வந்தர்களுள் ஒருவராக பார்க்கப்படுகிறார். ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரரான நீதா அம்பானியின் வாழ்க்கை திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தது என்பது குறித்து பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி கடந்த 1985ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிறகு, அந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்: இரட்டையர்கள் ஆகாஷ் மற்றும் இஷா அம்பானி, மற்றும் ஒரு இளைய மகன் ஆனந்த் அம்பானி. அவர்கள் மூவரும் தங்கள் இளமை காலத்தில் செல்வந்தர் வீட்டு பிள்ளைகளாக தான் வளர்ந்தார்கள். ஆனால் நீதா அம்பானியின் வாழ்க்கை இளமை காலத்தில் அப்படி ஆடம்பரமாக இல்லை.

Tap to resize

Latest Videos

சம்பளமே இல்லாமல் வேலை செய்யும் அம்பானி! செலவுகளை எப்படி நிர்வகிக்கிறார் தெரியுமா?

திருமணத்திற்கு முன் நீதா அம்பானி 

தனது 6வது வயதில், நீதா அம்பானி பரதநாட்டிய பயிற்சி பெறத் தொடங்கினார். கொஞ்ச காலத்திலேயே ஒரு Professional நடன கலைஞராக தனது தொடங்கினார். அதுமட்டுமல்ல ஒரு சிறிய பள்ளியில் நடன பயிற்றுவிப்பாளராகவும் அவர் பணியாற்றி வந்தார். ஒரு நடன நிகழ்ச்சியில் தான் நீதாவின் மாமனார் திருபாய் அம்பானி அவரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது மகன் முகேஷ் அம்பானியை திருமணம் செய்துகொள்ள சம்மதமா என்று அவர் கேட்டபோது, திருமணத்திற்குப் பிறகும் என் பணியைத் தொடர என்னை அனுமதிக்க வேண்டும் என்பதே அவர் வைத்த ஒரே கோரிக்கை. திருபாய் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினர், அதன் பிறகு தான் முகேஷை திருமணம் செய்துகொள்ள அவர் ஒப்புக்கொண்டார். 

ஒரு பேட்டியில் பேசிய நீதா, திருமணம் ஆன பிறகும் செயின்ட் ஃப்ளவர் நர்சரியில் ஆசிரியராக பணிபுரிந்ததாக கூறியுள்ளார். கோடீஸ்வரர்களைக் கொண்ட குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டாலும், அந்த நேரத்தில் தனது நடன திறமையை காக்க மாதம் 800 சம்பளத்திற்கு தான் அந்த பள்ளிக்கு வேலைக்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். 

சுதந்திர தினத்தன்று மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 7 இடங்கள் இவையே..!

click me!