மொத்த சொத்து மதிப்பு 3358 கோடி.. உலகின் பணக்கார நாய் பற்றி கேள்விபட்டருகிங்களா? யார் அந்த Gunther VI?

Ansgar R |  
Published : Aug 10, 2024, 10:30 PM IST
மொத்த சொத்து மதிப்பு 3358 கோடி.. உலகின் பணக்கார நாய் பற்றி கேள்விபட்டருகிங்களா? யார் அந்த Gunther VI?

சுருக்கம்

Richest Dog : ஜெர்மனி நாட்டில் வாழும் Gunther VI என்ற நாய் தான் உலகிலேயே மிகவும் பணக்கார நாயாக கருதப்படுகிறது.

கவுண்டஸ் கோர்லோட்டா லிபென்ஸ்டீன், குழந்தைகளோ அல்லது நெருங்கிய உறவினர்களோ இல்லாத ஒரு பணக்காரப் பெண்ணாக இருந்தவர் அவர். சொந்தங்கள் இல்லாத காரணத்தால் குந்தர் III என்ற தனது அன்பான வளர்ப்பு நாய்க்கு தனது முழு செல்வத்தையும் அவை விட்டு சென்றுள்ளார். பின்னர் குந்தர் IIIம் காலமானபோது, அந்த பரம்பரை சொத்து அவரது சந்ததியினருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. 

இப்போது அந்த 3358 கோடி சொத்துக்கும் வாரிசாக உள்ளார் குந்தர் VI என்ற அந்த நாய். குந்தர் VI ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்த்த நாய் என்பது குறிப்பிடத்தக்கது. இது தான் இப்போது உலகின் பணக்கார நாய் என்று கருதப்படுகிறது, ஜெர்மனி நாட்டில் இப்பொது ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றது. நாய் எப்படி சொத்துக்களை பாதுகாக்கிறது என்ற சந்தேகம் நம்முள் எழலாம். 

UAE Golden Visa | இந்தியாவை விட்டு வெளியேரும் 4300 மில்லினியர்கள்? எங்க போக போறாங்க தெரியுமா?

உண்மையில் குந்தரின் செல்வம் அனைத்தும், லிபென்ஸ்டீன் அமர்த்திய மனித அறங்காவலர் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அறங்காவலர்கள் தான் அந்த பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்து, தொடர்ந்து அந்த நாயின் சொத்து மதிப்பு உயர வழி செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் அந்த சொத்து மதிப்பு 400 மில்லியன் டாலராக இருந்துள்ளது. 

இந்த நாய்க்கு உலகம் முழுவதும் சொத்துக்கள் உள்ளது, அண்மையில் கூட பிரபல பாடகி மடோனாவுக்கு சொந்தமான ஒரு மாளிகையை 29 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அந்த நாய்க்காக வாங்கியுள்ளனர் அதன் அறங்காவலர்கள். தற்போது, ​​குந்தர் இத்தாலியின் டஸ்கனியில் வசித்து வருகின்றது. தனது ஓட்டுநர் இயக்கும் Convertable BMWல், இத்தாலியின் டஸ்கன் கிராமப்புறங்களைச் சுற்றிப் பயணம் செய்வதை அதிகம் விரும்புமாம் அந்த நாய். 

FeFe Dog Perfume | நாய்களுக்காக ரூ.9000க்கு பெர்ஃப்யூம்! ஒரு இடத்தில் மட்டும் அடிக்கக்கூடாது!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க