வெள்ளை நிற ஆடை அணிந்து, ஒரு இருண்ட குகைக்குள் ஒரு ஆழமற்ற நீரிரோடையின் நடுவே திருண ஜோடி அமர்ந்திருப்பதை வீடியோவில் காண முடிகிறது.
நாசிக்கில் நடந்த திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டில் பாம்பு ஒன்று புகுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
போட்டோஷூட்டை நடத்திய போட்டோகிராபர் பார்சூ (Parshu Kotame) இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.
பிக்பாக்கெட் வழக்கு: ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
வெள்ளை நிற ஆடை அணிந்து, ஒரு இருண்ட குகைக்குள் ஒரு ஆழமற்ற நீரிரோடையின் நடுவே திருண ஜோடி அமர்ந்திருப்பதை வீடியோவில் காண முடிகிறது. பாறையுடன் சுற்றிலும் புதர்களும் செடிகளும் இருக்கின்றன.
இந்தச் சூழலில் ஜோடியாக போட்டோஷூட்டுக்கு ரெடியாக இருந்தனர். அப்போது போட்டோஷூட் குழுவில் ஒருவர் தண்ணீரில் ஒரு பாம்பு ஓடுவதைக் கண்டார்.
பாம்பு ஜோடிக்கு அருகில் சுழன்றதால் பீதி ஏற்பட்டது. பாம்பு பெண்ணின் அருகில் ஊர்ந்து சென்றதால் அவர் பயத்தில் மிரண்டு போனார். சற்று நேரத்தில் பாம்பு விலகிச் சென்றதை அடுத்து, படக்குழுவினர் நிம்மதி பெருமூச்சுடன் போட்டோஷூட்டை தொடர்ந்தனர்.
மழை பாதிப்பு: நெல்லை, தூத்துக்குடியில் 5வது நாளாக நாளையும் விடுமுறை அறிவிப்பு