பிறந்த குழந்தையை காப்பாற்ற தீயாய் வேலை செய்த 350 ஆம்புலன்ஸ் டிரைவர்கள்...! 

First Published Oct 13, 2017, 7:56 PM IST
Highlights
Six months of pregnancy in Palakkad district of Kerala suddenly stomach ache.


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டச் சேர்ந்த 6 மாத கர்ப்பிணிக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. 

அந்த பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.  

ஆனால் அந்த குழந்தைக்கு நிம்மோனியா நோய் இருப்பதாகவும் அதற்கான சிகிச்சை திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் மட்டுமே உள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், 7 மணி நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் மட்டுமே குழ்ந்தையை காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த மருத்துவமனைக்கு 365 கிலோமீட்டர் எனவும் அங்கு செல்ல 10 மணி நேரம் ஆகும் எனவும் தெரிவித்துள்ளனர். 

இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுததை கேட்டு அங்கு இருந்த ஆம்புலஸ் டிரைவர்கள் ஓடி வந்து காரணத்தை கேட்டுள்ளனர். 

நிலைமையை அறிந்து குழந்தையை காப்பாற்றவேண்டும் என்று எண்ணி அங்கிருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 350 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் தகவல் தெவித்தனர்.

அவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு சென்று விபரத்தை கூறி போக்குவரத்தை சீர் செய்து 365 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 30 நிமிடத்தில் கடந்து மருத்துவமனையை அடைந்தனர். இதனால் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. 

click me!