Effects of Skipping Breakfast : காலை உணவு தவிர்ப்பதால் உடல்நலத்திற்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
நாளின் ஆரம்பம் நன்றாக இருந்தால் நாள் முழுவதும் நன்றாக இருக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் இன்றைய பிசியான வாழ்க்கையில் அன்றைய மிக முக்கியமான உணவை அதாவது காலை உணவை நாம் தவிர்த்து விடுகிறோம். காலை உணவை தவிர்ப்பதால் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது என்று பொதுவாக நாம் நம்புகிறோம். ஆனால் அது தவறு. உண்மையில், காலை உணவை தவிர்த்தால் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா?
ஆம், காலை உணவை நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமான தீங்கு விளைவிக்கும். காலை உணவை தவிர்ப்பதால் ஆரோக்கியத்திற்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
undefined
இதையும் படிங்க: காலைல இஞ்சி டீயா? இனி இஞ்சி, எலுமிச்சை பானம் குடிங்க!! பலரும் அறியாத அற்புத பலன்கள்
காலை உணவு தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள்:
எடை அதிகரிப்பு:
நீங்கள் காலை உணவை தவிர்த்தால் அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த பொருட்களை சாப்பிடுவதற்கான அதிக நாட்கள் உங்களுக்கு வர வாய்ப்புள்ளது. இதனால் உடல் எடை அதிகரிக்கும். எனவே காலை உணவை தவிர்ப்பது எடை இழப்பை விட ஆரோக்கியமற்ற உடல் எடை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும்.
ஆற்றல் பற்றாக்குறை:
காலை உணவை நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காது. இதனால் நீங்கள் பலவீனமாக உணரலாம் முக்கியமாக ஆற்றல் பற்றாக்குறையால் நாள் முழுவதும் சோர்வாக உணர்வீர்கள். கூடுதலாக அன்றாட உற்பத்தி திறனிலும் எதிர்மறையாக பாதிக்கப்படும். எனவே காலை உணவை தவிர்த்தால் உங்கள் அன்றாட வழக்கம் மோசமாக பாதிக்கப்படும்.
எரிச்சல்:
காலை உணவை சாப்பிட்டால் உடலுக்கு குளுக்கோஸ் கிடைக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு சரியாக பராமரிக்கப்படும். அதுவே காலை உணவை தவிர்த்தால் ரத்த சர்க்கரை அளவு குறைந்துவிடும். இதன் காரணமாக மன அழுத்த ஹார்மோன் அதிகரிக்கும். அதிகளவு மன அழுத்த ஹார்மோனால் உங்களது மனநிலை மிகவும் மோசமடையும். இதனால் நீங்கள் எரிச்சலாக உணர்வீர்கள். இதன் காரணமாக நீங்கள் அதிகமாக கோபப்படலாம் ஆனால் இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் இந்த '5' பொருள்களை சாப்பிடுங்க; சுகர் கண்ட்ரோலா இருக்கும்!
ஊட்டச்சத்து குறைபாடு:
காலை உணவு தான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. நீங்கள் காலை உணவு தவிர்த்தால் உங்களது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். ஊட்டச்சத்து குறைபாட்டால் பல்வேறு நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். கூடுதலாக, நோய் எதிர்ப்பு மண்டலமும் பலவீனமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வகை 2 நீரிழிவு:
நிபுணர்களின் கூற்றுப்படி, காலை உணவை தவிர்த்தால் வகை 2 நீரிழிவு நோய் அபாயம் அதிகரிக்கும். ஏனெனில் காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் உடலில் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை தடுக்கிறது. இதனால் நீரிழிவு அபாயத்திற்கு வழிவகுக்கும்.
இதய நோய் ஆபத்து:
இதயம் ஆரோக்கியமாக இருக்க காலை உணவு சாப்பிடுவது மிகவும் அவசியம். காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்களின் அபாயம் அதிகரிக்கும். இதனால் இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கும். அதுபோல காலை உணவை தாமதமாக சாப்பிட்டாலும் இதயத்திற்கு நல்லதல்ல.