Walking After Meals : உணவு சாப்பிட்டு நடைபயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
எடையை குறைக்க நினைப்பவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அவர்களுடைய நிலையான பழக்கங்கள் தான் எடை குறைப்பில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். உணவு சாப்பிட்ட பின்னர் நடப்பது அல்லது சாப்பிடாமல் நடப்பது எது அவர்களுடைய எடை குறைப்புக்கு உதவும் என பலருக்கும் தெரியாது. அது குறித்து இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.
ஒருவர் சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்வதால் அவருடைய செரிமானம் மேம்படும். இதனால் வயிறு வீக்கம் போன்ற தோற்றம் குறைகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் இது உதவுகிறது. உணவுக்கு பின்னர் நடப்பதால் கலோரிகள் விரைவில் எரிக்கப்படுகிறது. அவை உடலில் சேமிக்கப்படாமல் தவிர்க்கப்படும். நீங்கள் சாப்பிட்ட பின்னர் இயல்பாக ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் நடப்பது உங்களுடைய பசியை குறைக்க உதவுகிறது. உடலை இயக்கமாக வைத்திருக்கும் போது ஹார்மோன்கள் சீராக செயல்பட்டு மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். நீங்கள் தீவிரமான உடற்பயிற்சியை செய்ய தயங்குபவராக இருந்தால் தினமும் சாப்பிட்ட பின்னர் நடைபயிற்சி செய்யலாம்.
undefined
சர்க்கரை நோய் கட்டுப்பாடு:
நீங்கள் நாள்தோறும் சாப்பிட்ட பின்னர் நடப்பதை பழக்கப்படுத்திக் கொண்டால் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும் இது உங்களுடைய எடை குறைப்பு பயணத்தில் உதவியாக இருக்கும் நீங்கள் நடைபயிற்சி செய்வதால் உங்களுடைய தசைகள் குளுக்கோசை உறிஞ்சுவது ஊக்குவிக்கப்படுகிறது இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது இன்சுலின் சிறப்பை குறைக்கிறது உடலில் கொழுப்பு சமைப்பது கணிசமாக குறைகிறது சாப்பிட்ட பின்னர் 15 நிமிடங்கள் நீங்கள் நடப்பது இந்த பலன்களைப் பெற உதவும்.
வளர்சிதை மாற்றம்:
சாப்பாட்டிற்கு பின்னர் நடைபயிற்சி செய்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உங்களுடைய உடலில் அதிகமான கலோரிகள் எரிக்கப்பட வாய்ப்பாக அமைகிறது. நடைபயிற்சி உங்களுடைய இரைப்பை இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் செரிமானம் நன்றாக இருக்கும். வயிறு வீக்கம், செரிமான கோளாறுகள், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் குறைகிறது. ஒரு ஆய்வில் சாப்பாட்டிற்கு பின்னர் நடப்பது இரைப்பை விரைவாக செயல்படுவதை ஊக்குவிப்பதாக கூறியுள்ளது. இதனால் விரைவில் உணவு செரிக்கும்.
இதையும் படிங்க: வெறும் 15 நிமிடம் வாக்கிங்.. எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
மிதமான உடற்பயிற்சி:
சாப்பிட்ட பின்னர் நடைபயிற்சி செய்வது உடலில் கொழுப்புகள் சேரும் வாய்ப்பை குறைப்பதாக தெரிவித்துள்ளது. நடைபயிற்சி மன அழுத்தத்தை குறைப்பதோடு, அதிக பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இவை உடல் எடையை அதிகரிக்கும் காரணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நபர் மன அழுத்தத்துடன் இருக்கும்போது அவருடைய கார்டிசோல் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இதனால் அவருடைய உடல் எடை குறைவது தடுக்கப்படுகிறது. ஆனால் சாப்பாட்டிற்கு பின்னர் நடப்பவர்கள் மன அழுத்த ஹார்மோன் சுரப்பு குறைவாக உள்ளது. இது எடை குறைப்புக்கு உதவும்.
இதையும் படிங்க: காலை vs மாலை: எப்ப வாக்கிங் போறது எடையை குறைக்க உதவும்?
எத்தனை நிமிடங்கள் நடக்கனும்?
காலை உணவு: சாப்பிட்ட பின் 10 முதல் 15 நிமிடங்கள்
மதிய உணவு : 15 முதல் 30 நிமிடங்கள்
இரவு உணவு: 10 முதல் 15 நிமிடங்கள்
சாப்பிட்ட பின்னர் குறுநடை போடுவது உங்களுடைய செரிமானத்தை மேம்படுத்தும். அத்துடன் உடல் எடையை குறைக்கவும் உதவும். முதலாவதாக நடக்க தொடங்கும் போது மிதமான வேகத்தில் நடக்கலாம். உங்களுடைய வீட்டிலோ, அலுவலகத்திலோ படிகள் இருந்தால் சில படிகளில் ஏறி, இறங்குவதையும் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். நாட்கள் ஆக ஆக படிப்படியாக உங்களுடைய வேகத்தையும், நடக்கும் நிமிடங்களையும் அதிகரிக்கலாம். ஒருவேளை உங்களுக்கு நடக்கும் போது ஏதேனும் வலி ஏற்பட்டால் அசௌகரியமாக உணர்ந்தால் சாப்பாட்டிற்கு பின்னர் நடப்பதை தவிர்க்கலாம். உங்களுடைய உடலில் ஆரோக்கியமும் முக்கியம்.