Bride: இவ்வளவு அழகான மணப்பெண்ணுக்கு இப்படி ஒரு பிரச்சனையா..? இணையத்தில் வைரலாகும் மணப்பெண் வீடியோ..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 07, 2022, 12:52 PM ISTUpdated : Feb 07, 2022, 12:54 PM IST
Bride: இவ்வளவு அழகான மணப்பெண்ணுக்கு இப்படி ஒரு பிரச்சனையா..?  இணையத்தில் வைரலாகும்  மணப்பெண்  வீடியோ..!!

சுருக்கம்

திருமணத்திற்கு தயாரான, மணமகளின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு தயாரான மணமகளின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்கள் வாழ்வின் மிக முக்கிய தினங்களில் அவர்களது திருமணநாளும் ஒன்றாகும். திருமணம் என்பது 'ஆயிரம் காலத்து பயிர்' என்று நாம் முன்னோர்கள் சொல்லி கேட்டிருப்போம். நம் முன்னோர்கள் கணவன்-மனைவி இருவரும் இனி வரும் நாட்களில் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர்.

அவர்களிடையே பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், அன்பு, புரிதல், நம்பிக்கை மிக அவசியம். அதனால்தான் நல்ல நாள் பார்த்து, சொந்தபந்தங்களைத் திரட்டி கல்யாணம் செய்கின்றனர். ஆனால், இன்றைய நவீன உலகில் திருமணம் என்பது இணையம் வழியாக நடைபெற்று அதன் மூலம் முடிவடைய துவங்கியுள்ளது. இருப்பினும், வெகு சிலர் மட்டுமே, தங்கள் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக கடந்து செல்கின்றனர்.  

இந்தியாவில் இது திருமண சீசன், திருமணத்திற்கு தயாராகும் தம்பதிகள் தங்கள் திருமணத்தை மறக்க முடியாததாக மாற்றும் வகையில் அலங்காரம் செய்து கொள்வது வழக்கம். எந்தவொரு பெண்ணும் தனது திருமண நாளில் மிகவும் அழகாக இருக்க விரும்புகிறாள், அதற்காக பிரத்யேகமாக ஆடைகளை முன்கூட்டியே தயார் செய்யப்படுகிறது. மேலும், திருமண மேக்கப் எப்படி, எங்கிருந்து செய்வது என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அப்படியாக, இந்த காணொளியில் திருமணத்திற்காக தயாராக  மணப்பெண் அழகு நிலையத்திற்கு  சென்றுள்ளார், ஆனால் அவர் திரும்பி வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோவும் வைரலாகிறது.  

திருமணத்திற்கு செல்பவர்கள், மணப்பெண்ணின் அலங்காரத்தை பார்ப்பதில் ஆவலாக இருப்பார்கள். அப்படி, எதிர்பார்த்த உறவினர்களுக்கு மணப்பெண் தேவதை போல் காட்சியளித்துள்ளார். ஆனால், அவர் மிகவும் குள்ளமாக இருந்துள்ளார். இவ்வளவு அழகான பெண்ணுக்கு, இப்படி ஒரு பிரச்சனையா என்று, உறவினர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

உயரம் குறைந்த ஒருவரைக் கண்டால் அவர்களின் திறமையும் பண்பும் குறைவாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உருவக்கேலி செய்வது தவறு என்ற வாதங்கள் வலுத்துவருவதும், அதற்கான கண்டனங்கள் அதிகரித்து வருவதும் மிகவும் ஆக்கப்பூர்வமான விஷயம்.

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் மணப்பெண் சற்று குட்டையாக இருந்தாலும், அழகில் பேரழகியாக இருக்கிறார். 

மணமகளின் அழகை என்ன சொல்லி வர்ணிப்பது? என்ன சொல்லி பாடுவது என்று ஹீரோக்களே திகைத்து நிற்பார்கள் என்ற கமெண்டுகள் சமூக ஊடகங்களில் தூள் பறக்கின்றன. உயரம் குறைவான மணமகள் வீடியோ சமூக ஊடகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. 

இந்த வீடியோவை ராஜ் மேக்ஓவர்ஸ் நானக்மட்டா என்ற கணக்கு இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியவுடன், மக்கள் அதை மிகவும் விரும்பினர். 9 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர், அதே நேரத்தில் இது மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், திருமணத்தன்று அந்த பெண், மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு வெளியே வந்த பிறகு பார்த்த விழிகள், பார்த்தபடியே பூத்துக் கிடந்ததனவாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்