Happy Rose Day 2022 Tamil Songs: இளசுகளை சுண்டி இழுக்கும் 'ரோஜா' தினத்தை நினைவுகூரும் தமிழ் பாடல்கள்..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 07, 2022, 11:38 AM ISTUpdated : Feb 07, 2022, 11:46 AM IST
Happy Rose Day 2022 Tamil Songs: இளசுகளை சுண்டி இழுக்கும் 'ரோஜா' தினத்தை நினைவுகூரும் தமிழ் பாடல்கள்..!!

சுருக்கம்

காதலர் தினம் தொடங்கியது என்றவுடன் 90s கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை உள்ள அனைவருக்கும் கண் முன் வந்து செல்வது ''காதல்'' தொடர்பான திரைப்பட பாடல்கள் தான். 

உலகம் முழுவதிலும், ரொமான்டிக் வாரத்தின் முதல் நாள்  இன்று பிப்ரவரி 7-ம் தேதி ரோஜா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில், காதலர்கள் தனது  மனம் கவர்ந்தவருக்கு ரோஜா பூக்களை பரிசாக கொடுப்பார்கள். பலர்,  சமூக வலைத்தளத்தில், வீடியோ, ஸ்டேட்டஸ், போன்றவற்றை பகிர்ந்து வருகின்றனர். இவை, இணையத்தி வேகமாக பரவி வருகிறது. 

காதலர் தினம் தொடங்கியது என்றவுடன் 90s கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை உள்ள அனைவருக்கும் கண் முன் வந்து செல்வது ''காதல்'' தொடர்பான திரைப்பட பாடல்கள் தான். 

தமிழ் சினிமாவுக்கு காதல் ஒரு தவிர்க்க முடியாத உள்ளடக்கமாக இருந்துவருகிறது. 1990களின் இறுதிவரை ஒவ்வொரு கதாநாயக நடிகரும் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கு முதல் படியாகக் காதல் படங்களில் நடித்து இளசுகளின் மனங்களில் இடம்பிடித்தாக வேண்டும். 1990-களின் பிற்பகுதியில் கவனம் ஈர்க்கத் தொடங்கிவிட்ட விஜய், அஜித் தொடர்ந்து பல காதல் படங்களில் நடித்து வந்தனர். 

அவர்களில், விஜய்யின் காதல் படங்களில் தரமான வெற்றிப் படமாகவும் இன்று மிகப் பெரிய நட்சத்திரமாக உயர்ந்து நிற்கும் அவருடைய திரைவாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகவும் அமைந்த படங்களில் ஒன்றான ‘காதலுக்கு மரியாதை’ (1997 டிசம்பர் 19) அன்று வெளியிடப்பட்டது.

 அஜித்தின் ''அவள் வருவாளா''  1998 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில், இடம்பெற்றிருக்கும் 'சேலையிலே வீடு கட்டவா' பாடல் இளசுகளை சுண்டி இழுக்கும். 

அஜித்தின் நடிப்பில் ''ஆசை'' திரைப்படத்தில் வெளியான,

கொஞ்ச நாள் பொறு தலைவா,  

ஒரு வஞ்சிக்கொடிஇங்க வருவா 

கண்ணிரண்டில் போா் தொடுப்பா 

அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா இளசுகளால் அதிகம் ரசிக்கப்பட்டவை ஆகும். 

குறிப்பாக, 1999 ஆம் ஆண்டு ஏ.ஆர் ரஹ்மான், இசையில் வெளிவந்த ''காதலர் தினம்'' திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் ரசிகர்களை என்றென்றும் கிறங்கடிக்க வைக்கிறது. குறிப்பாக, இன்று ரோஜா தினம் என்றவுடன், 90s கிட்ஸ் நபர்களை கவர்ந்த,

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா  

உன் பேர் மெல்ல நான் சொன்னதும்

என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக் காணாவிடில் 

எங்கே உன் அன்பென்று கேட்கின்றன. என்ற பாடல் வரிகள் அனைவரின் கண் முன் வந்து செல்லும்.

அப்பாஸ், வினீத், தபு நடிப்பில் வெளியான 1996 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் திரைப்படமாகும்.

''என்ன விலை அழகே'' பாடல் வரிகள், மற்றும் ''என்னை காணவில்லையே நேற்றோடு'' பாடல்கள் 90sகிட்ஸ்களை அதிகம் கவர்ந்தவை.

கமலின் நடிப்பில், இளையராஜா இசையில் உருவான ''சத்யா'' திரைப்பட பாடல், ''வலையோசை கலகலவென'' பாடல் 90sகிட்ஸ் இளசுகளை சுண்டி இழுக்கும். 

 பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982)

ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982)

மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979)

பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)

தமிழ் திரையுலகில் பல பாடல்கள் இன்று வந்தாலும், ஒரு சில நாட்களுக்கு பின் மறந்து போகின்றன. ஆனால், அன்று முதல் இன்றுவரை 90s கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை உள்ள அனைவருக்கும் கண் முன் வந்து செல்வது மேலே சொன்ன ''காதல்'' தொடர்பான திரைப்பட பாடல்கள் தான். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்