Happy Rose Day 2022 Gift Ideas: ரோஜா தினத்தில் உங்கள் மனம் கவர்ந்தவருக்கு... பரிசு கொடுப்பது ஏன் அவசியம்..!

Anija Kannan   | Asianet News
Published : Feb 07, 2022, 09:52 AM ISTUpdated : Feb 07, 2022, 10:06 AM IST
Happy Rose Day 2022 Gift Ideas: ரோஜா தினத்தில் உங்கள் மனம் கவர்ந்தவருக்கு... பரிசு கொடுப்பது ஏன் அவசியம்..!

சுருக்கம்

ரோஜா தினத்தில், உங்கள் காதல் உணர்வை வெளிப்படுத்த ரோஜா பூ ஒன்றை ஒன்றை நீங்கள் காதலிப்பவரிடம் அளித்தால் மிக சிறப்பாக இருக்கும்.

ரோஜா தினத்தில், உங்கள் காதல் உணர்வை வெளிப்படுத்த ரோஜா பூ ஒன்றை ஒன்றை நீங்கள் காதலிப்பவரிடம் அளித்தால் மிக சிறப்பாக இருக்கும்.

உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14 ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களின் காதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்த சிறந்த நாளாக கருதுவர். இந்த நாளில், ஆண், பெண் இருவருமே தனது லவ்வருக்கு மனம் கவரும் வகையில் ஒரு கிப்ட் வழங்கி அசத்த வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். காதலில் பரிசுகளுக்கு என்று எப்போதும் சிறப்பு இடம் உண்டு.  இன்று ரோஜா தினம் என்பதால், ரோஜா பூவை உங்கள் மனம் கவர்ந்தவருக்கு பரிசாக கொடுங்கள்.  

உணர்வுகள் சார்ந்தது : 

உங்கள் மனம் கவர்ந்தவரிடம் எப்படி? காதலை வெளிப்படுத்துவது என்கிற கேள்வி பல நேரங்களில் இருக்கும். இந்த இடத்தில் தான் பரிசுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆம், உங்களின் காதல் உணர்வை வெளிப்படுத்த இந்த ரோஜா தினத்தில், ஏற்ற பரிசு ஒன்றை நீங்கள் காதலிப்பவரிடம் அளித்தால் மிக சிறப்பாக இருக்கும். இதன் மூலம் உங்கள் காதல் உணர்வின் மதிப்பை அவர்கள் புரிந்து கொள்ள செய்வார்கள். அதே போன்று அவரை நீங்கள் எந்த அளவிற்கு உங்கள் வாழ்க்கையில் முக்கியமானவராக பார்க்கிறீர்கள் என்பதையும் அவர் தெரிந்து கொள்வார்.

பிடித்த இடம்:

உங்கள் அன்புக்குரியவரை. இந்த நாளில் அவருக்கு பிடித்த இடத்திற்கு அழைத்து சென்று ரோஜா பூவை கொடுத்து மகிழ்ச்சி படுத்தலாம். இப்போதெல்லாம் ரோஜா பொக்கே கொடுக்கலாம். அதே போன்று அவரிடம் அவருக்கு பிடித்தவற்றை பேசி மகிழலாம். இவை எல்லாமே ஒருவித பரிசாக அவரால் கருதப்படும்.

ரோஜா பூ போட்ட ரொமான்டிக் கப்: 

ரோஜா பூ போட்ட ரொமான்டிக் கப்பை பரிசாக கொடுத்தல், தினமும் காலை அதில் காபி குடிக்கையில் உங்கள் ஞாபாகம் வரும்; நீங்கள் இருவரும் ஒன்றாக செலவிட்ட நேரங்கள் ஞாபாகத்திற்கு வரும். இவ்வகை கப் கவர்ச்சியுடன் விளங்கும்.  

ரோஜா தினம்:

பரிசுகள் என்பவை சில முக்கிய தினங்களில் அவசியம் தந்தாக வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது. இது உங்கள் உறவை மதிப்புள்ளதாக மாற்றும். அதே போன்று உங்கள் மீது உங்கள் துணைக்கு அதிக நம்பிக்கையும், அன்பும் பிறக்கும். எனவே, இன்றி உங்கள் மனம் கவர்ந்தவர்க்கு பரிசுகள் வழங்க வேண்டியது அவசியம்.

மன்னிப்பு:

உங்கள் மனம் கவர்ந்தவரிடம் மன்னிப்பு கேட்க விரும்பினால், நீங்கள் ரோஜாவை பரிசாக தரலாம். உங்கள் துணையை சமாதானப்படுத்துவது கடினமாக இருந்தால்,ரோஜாவுடன் சேர்த்து மன்னிப்பு கேட்கலாம். இந்த பரிசு பல அதிசயங்களைச் செய்யும். மேலும் இது உங்கள் உணர்வின் அடையாளமாகவும் பார்க்கப்படும்.

 நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கும்போது:

பல நாட்களுக்கு பிறகு நீங்கள் காதல் செய்பவரை பார்க்க போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக ஒரு ரோஜா பொக்கே ஒன்றை கொண்டு செல்லுங்கள். இதன் மூலம் அவர் உங்களுக்கு எந்த அளவிற்கு முக்கியமானவர் என்பதை அவர் புரிந்து கொள்வார். பரிசு என்பவை பெரிய அளவில் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இவை சிறிய ஒன்றாக கூட இருக்கலாம். எதுவாகினும் நீங்கள் காதலிப்பவர் இதை ஏற்று கொள்வார்.எனவே, இந்த ரோஜா தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாட வாழ்த்துக்கள்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்